Cinema News
துக்கம் விசாரிக்கப் போன இடத்துல சூரி பார்த்த வேலை! ‘ஏகே63’க்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா?
Ajith – Soori: நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தி விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதால் த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகிய இரண்டு கதாநாயகிகள் படத்தில் நடிக்கின்றனர்.
படம் ஆக்ஷன் படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்காக அஜித்துக்கு 105 கோடி சம்பளம் என பேசப்பட்டிருக்கிறதாம். இதற்கு முந்தைய படத்தில் 65 கோடி வாங்கிக் கொண்டிருந்த அஜித் இந்தப் படத்திற்காக அதிகரித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினியோட மோத நினைச்சேன்!. ஆனா மிஸ் ஆயிடுச்சி!.. லிங்குசாமிக்கு வந்த விபரீத ஆசை!..
இதை பற்றி ஒரு சினிமா விமர்சகர் கூறியதாவது. அஜித்தை பொறுத்தவரைக்கும் படம் எப்படி இருந்தாலும் சரி, எத்தனை ஹிட்களை கொடுத்திருக்கிறோம் என்றெல்லாம் அஜித் பார்ப்பதே இல்லை. விஜய் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை மட்டுமேதான் அஜித் பார்க்கிறார் என்று அந்த சினிமா பத்திரிக்கையாளர் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை முதலில் சத்யஜோதி பிலிம்ஸ்தான் தயாரிக்க இருந்ததாம். திடீரென 105 கோடி என்று சொன்னதும்தான் லைக்கா உள்ள வந்திருக்கிறது என அந்த பத்திரிக்கையாளர் கூறினார். மேலும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருக்கிறார்.
இதையும் படிங்க: லியோ வசூல் கணக்கு எல்லாமே பொய்!.. சொன்னா மிரட்டுறாங்க!.. அடுத்த குண்டை வீசிய திருப்பூர் சுப்ரமணியன்…
அந்தப் படத்தை விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் தயாரிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எல்ரெட்டும் அஜித்தும் எப்படி இணைந்தார்கள் என்றால் அதற்கு காரணமாக இருந்தது நடிகர் சூரி என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் அப்பா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க போன சூரியிடம் அஜித் பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது என்ன ப்ராஜக்ட் போய்க் கொண்டிருக்கிறது என அஜித் சூரியிடம் கேட்க விடுதலை படத்தையும் அதன் தயாரிப்பாளர் பற்றியும் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் 4 கோடி பட்ஜெட்டில் தீர்மானிக்கப்பட்ட படம் இப்போது 40 கோடி வரை வந்து நிற்கின்றது என்றும்,
இதையும் படிங்க: டைட் பனியன்.. லூஸ் பேண்ட்!. ஏடாகூடமான உடையில் பல்சை எகிறவைக்கும் ஷிவானி…
ஆனால் தயாரிப்பாளரான எல்ரெட் தன் சொந்தச் செலவிலேயே படத்தை தயாரிக்கிறார் என்றதும் அஜித்துக்கு ஒரே ஆச்சரியமாம். மேலும் எல்ரெட் ஏதோ குவாரி பிஸினஸ் செய்து வருவதால் ஒரு பக்கம் காசு வந்து கொண்டுதான் இருக்குமாம். அதனால் எவ்வளவு பணம் கேட்டாலும் தரக்கூடிய தயாரிப்பாளராக எல்ரெட் இருக்கிறார்.
இதன் காரணமாகவே ஏகே 63 படத்தில் அஜித் இன்னும் 60 கோடி தன் சம்பளத்தில் கூட்டி மொத்தமாக 165 கோடியாக அதிகரித்திருக்கிறார் என்று அந்த சினிமா பத்திரிக்கையாளர் கூறினார்.