Connect with us

Cinema News

த்ரிஷாவுக்கு முத்தமெல்லாம் கொடுக்க முடியாது… மறுத்த முன்னணி நடிகர்..! ஆனா படம் சூப்பர்ஹிட்..!

Trisha: தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி த்ரிஷா பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். க்ளாமரே காட்டாமல் தன் நடிப்பாலே தனக்கான ஒரு கூட்டத்தினை உருவாக்கி வைத்திருப்பவருக்கு ஒரு நடிகரே நோ சொன்ன சம்பவமும் நடந்து இருக்கிறது.

மௌனம் பேசியதே படம் மூலம் திரைக்கு வந்தார் நடிகை த்ரிஷா. ஆனால் அவருக்கு அப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் ஒரளவில் பாராட்டை கொடுத்தது. தொடர்ச்சியாக தமிழ் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

இதையும் படிங்க: கலைஞர் அந்த நடிகைக்கு செய்த உதவி! அதே போல் முதல்வர் செய்யமாட்டாரா? மனைவிக்காக முறையிட்ட விக்ரமன்

விஜய், அஜித், சூர்யா என முன்னணி பிரபலங்களுடன் ஜோடி போட்டார். இதில் பல படங்கள் மாஸ் ஹிட் என்பதால் த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே சென்றது. அந்த நேரத்தில் திரையுலகில் ராணாவுடன் ஏற்பட்ட காதல், நிச்சய முறிவு என பல பிரச்னைகளால் த்ரிஷா சரிந்தார். அந்த நேரத்தில் நயன் மார்க்கெட்டை பிடித்து விட்டார்.

எக்கசக்கமாக என்னவோ செய்தாலும் த்ரிஷாவால் இழந்த இடத்தினை பிடிக்கவே முடியவில்லை. டாப் பிரபலங்களும் அவரை சீண்டவில்லை. தொடர்ந்து தனி நாயகியாக நடித்த அத்தனை படங்களுமே தோல்வியை தழுவியது. 

இதையடுத்து பொன்னியின் செல்வனில் மீண்டும் தன் நடிப்பால் இடத்தினை பிடித்தார். தொடர்ச்சியாக சமீபத்தில் இவர் நடிப்பில் லியோ படம் திரைக்கு வந்தது. அடுத்ததாக விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இதில் லியோ படத்தில் லிப்கிஸ் வரை அம்மணி ஓகே சொல்லி நடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மகள் நிச்சயம் முடிந்த சந்தோஷத்தில் நம்ம ஹரால்டு தாஸ பாருங்க! என்னமா ஸ்டைலா இருக்காரு?

ஆனால் இதற்கு முன்னர் இவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 96. இப்படத்தில் ரொம்பவே சிம்பிள்ளான த்ரிஷாவாக வலம் வந்தார். க்ளைமேக்ஸ் காட்சியில் முத்த காட்சியை வைக்க இயக்குனர் முடிவெடுத்தாராம். ஆனால் விஜய் சேதுபதி தன்னால் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top