Connect with us

Bigg Boss

இவங்க தான் அந்த அஞ்சு பேரா.. ஒன்னுக்கூட தேறாது போலையே.. அப்போ இனி பிக்பாஸ் 7வது சீசனுக்கு மூடுவிழா தானா..!

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் டீம் எப்படியாவது இந்த சீசனுக்கு டிஆர்பியை ஏற்றி விடலாம் என்ற ஆசையில் என்னென்னவோ செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக 5 வைல்ட் கார்டு வர இருக்கின்றனர்.

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஹிட்டாக இருப்பது தான் பிக்பாஸ் தமிழ். 6 சீசன் வரை சரியாக சென்று கொண்டு இருந்த பார்மெட்டில் தேவையே இல்லாமல் கையை வைத்தனர். இரு வீடு என புது ஐடியா பிடிக்க அப்போ டாஸ்கெல்லாம் வெறித்தனமா இருக்கும் போல.

இதையும் வாசிங்க:இனிமே இப்படிதான் நடிக்கனும்… விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட சங்கீதா…

இப்படி ரசிகர்கள் பல எதிர்ப்பார்ப்பில் நிகழ்ச்சியை பார்க்க ஒரு வாரம் போனது. போட்டியாளர்கள் கூட யாரும் பெரிதாக கவரவே இல்லாமல் போக தொடர்ச்சியாக இரண்டு வாரங்களை தாண்டிய ரசிகர்கள் இனிமேலாம் டாஸ்க் இருக்காது. இது டம்மி போல என கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

இதை சரிக்கட்டும் விதமாக ஐந்து வைல்ட் கார்டை ஒரே அடியாக உள்ளே இருக்க குழு திட்டமிட்டு விட்டது. இதற்கான அறிவிப்பு போன வாரத்தில் இருந்தே வெளியானது. அப்படி யாருப்பா அது என ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இதையும் வாசிங்க:த்ரிஷாவுக்கு முத்தமெல்லாம் கொடுக்க முடியாது… மறுத்த முன்னணி நடிகர்..! ஆனா படம் சூப்பர்ஹிட்..!

தற்போது அவர்கள் யார் என்ற ரகசியம் கசிந்துள்ளது. காசு பணம் பாடல் மூலம் செம ஹிட்டான கானா பாலா. ராஜா ராணி சீரியலில் காமெடி வில்லியாக கலக்கிய விஜே அர்ச்சனா, கடந்த சீசனில் நின்று ஆடிய ரச்சிதாவின் கணவர் தினேஷ் ஆகியோர் எண்ட்ரி கொடுக்க இருக்கின்றனர்.

மேலும், பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா பாரதி, ஆர்.ஜே. ப்ராவோ ஆகியோரும் ஒரேடியாக இன்று இரவு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கின்றனர். இவர்கள் செல்லும் அந்த எபிசோட் நாளை இரவு தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Bigg Boss

To Top