விக்ரம் செய்த மேஜிக்! தூசு தட்டி வெளியே எடுத்த கௌதம் மேனன் – ரிலீஸுக்கு பின்னாடி இப்படி ஒரு ஒப்பந்தமா?

Published on: October 28, 2023
vikram
---Advertisement---

Dhuru Natchathiram: விக்ரம் நடிப்பில் கடந்த சில வருடங்களாக கிடப்பிலேயே இருந்த படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார். ஹரீஸ் ஜெயராஜ் இசையில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம்தான் துருவ நட்சத்திரம்.

படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ஏதோ சில பணப் பிரச்சினையால் படம் வெளிவராமலேயே இருந்தன. படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்யவேண்டும் என கௌதம் மேனனும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். ஆனால் முடியவே இல்லை.

இதையும் படிங்க: கடுப்பில் இருந்த படக்குழு… ஆனால் கண்ணழகை காட்டி கவிழ்த்த அமலாபால்…

ஒரு வழியாக எல்லா பிரச்சினைகளும் முடிந்து படம் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என விசாரிக்கும் போது பல தகவல்கள் கிடைத்தன.

மும்பையில் இருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனம்தான் இந்தப் படத்திற்காக பெரிய நிதியை வழங்கியிருக்கிறதாம். அதுவும் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை நாங்கள்தான் பண்ணுவோம் என்ற அடிப்படையில்தான் இந்த பணத்தை வழங்கியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தி நகரில் தீபாவளி ஷாப்பிங் செய்த ராக் ஸ்டார் கமலேஷ்.. அதுவும் எந்த கடையில் தெரியுமா?

இன்னும் முதல் பாகமே வராத நிலையில் இரண்டாம் பாகத்தின் மீது எப்படி நம்பிக்கை பிறந்தது என்றால் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நானே நடிக்கிறேன் என்று கைப்பட விக்ரம் எழுதி கொடுத்ததனால்தான் இதை நம்பி இந்த பணத்தை வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் துருவ நட்சத்திரம் படத்தை பார்த்த விக்ரமுக்கும் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வந்ததனால் இரண்டாம் பாகமும் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: இதற்கு தான் ப்ரதீப்பை அடித்தேன்.. பிக்பாஸ் சம்பவம் குறித்து உண்மை சொன்ன விஜய் வர்மா..! இருந்தாலும் தப்பு பாஸ்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.