Connect with us

Cinema News

லியோவில் விஜய்க்கு பதில் அஜித்!.. அடக்கொடுமையே என்னடா இது விடாமுயற்சிக்கு வந்த வில்லங்கம்?..

லியோ படத்தில் நடித்த நடிகர்களை அப்படியே அஜித்தின் விடாமுயற்சிக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி இறக்கியிருப்பதை பார்த்து அஜித் ரசிகர்களே ஆடிப் போயுள்ளனர்.

படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்தாலும் அதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அறிவிக்க வேண்டாம் என அஜித் எதற்காக கட்டளை போட்டுள்ளார் என்றே தெரியவில்லை என்றாலும், லியோ படத்தில் நடித்த நடிகர்களையே களமிறக்கி இருப்பதால் தான் இப்படி அடக்கி வாசித்து வருகிறார் என்கின்றனர்.

இதையும் படிங்க: சாமில திருநெல்வேலி!.. சியான் 62ல திருத்தணி.. அறிமுகமே வெறித்தனமா இருக்கே.. இயக்குனர் யாரு தெரியுமா?..

ஓவர் ஹைப்பை எகிற விட்டால் கடைசியில் லியோ படத்துக்கு நேர்ந்த நிலைமை விடாமுயற்சிக்கும் ஏற்பட்டு விடுமோ என்கிற பயத்தில் தான் அஜித் அமைதியாக சூட்டிங்கிற்கு மட்டும் சென்று வருவதாக கூறுகின்றனர்.

லியோ படத்தில் விஜய்யை தூக்கி விட்டு அஜித் நடித்தால் எப்படி இருக்குமோ? அதே போலத்தான் விடாமுயற்சியில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா, வில்லன்களாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் நடித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இதற்கு தான் ப்ரதீப்பை அடித்தேன்.. பிக்பாஸ் சம்பவம் குறித்து உண்மை சொன்ன விஜய் வர்மா..! இருந்தாலும் தப்பு பாஸ்..!

மேலும், பிரியா ஆனந்த்குக்கு பதில் இங்கே பிரியா பவானி சங்கரும் மடோனா சபாஸ்டியனுக்கு பதிலாக ரெஜினா கசாண்ட்ராவும் என இன்ச் இன்சாக லியோவை பார்த்தே அஜித்தின் விடாமுயற்சி படத்தை உருவாக்கி வருகிறார் மகிழ் திருமேனி என்கின்றனர்.

படத்தின் ரிசல்ட்டும் லியோ போலவே அமைந்து விடுமோ என்கிற அச்சம் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் அஜித்தின் விடாமுயற்சியில் இணைந்துள்ளனர் என்கிற தகவலை கேட்டதுமே அஜித் ரசிகர்களுக்கே வந்து விட்டது தான் இதில் ஹைலைட் என்று கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top