BiggBoss7: இந்த சீசனோட ‘மருத்துவ’ முத்தம் இதான் போல… தாளிக்கும் ரசிகர்கள்!

Published on: October 28, 2023
Biggbossseason7
---Advertisement---

பிக்பாஸ் சீசனின் சமீபத்திய மருத்துவ முத்தம் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ரொம்ப ஓவரா தான் போறீங்க என சமூக வலைதளங்களில் பிக்பாசை தாளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை. கமல் ஏதோ புதுசா டிரை பண்றாரு போல என கேஷுவலாக இருந்தனர். ஆனால் விஜய் டிவி நமீதா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஓவியா, ஆர்த்தி, நமீதா என யாரும் யூகிக்க முடியாத போட்டியாளர்களை உள்ளே கொண்டு வந்தனர்.

விளைவாக இந்த நிகழ்ச்சி எப்படித்தான் போகிறது என பொழுதுபோக்கு போல தமிழ்நாடு ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்து கடைசியில் ஒவ்வொருவருக்கும் ஆர்மி ஆரம்பித்து அடித்து கொள்ளும் நிலை உருவானது. அதிலும் ஓவியாவிற்கு எல்லாம் மிகப்பெரிய நெட்வொர்க்கே இயங்கியது. முதல் சீசன் தான் பலவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது.

குறிப்பாக மருத்துவ முத்தம் ஆரவ்-ஓவியா நடுவில் நிகழ்ந்த இந்த முத்த பரிமாற்றம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே பேசுபொருளாக்கி முத்தம் என்ற சொல் தெரியும் இது என்ன மருத்துவ முத்தம் என ரகசிய விசாரணையில் இறங்க வைத்தது. அப்படி ஒரு முத்தம் அது. சொல்ல போனால் அந்த சீசன் டிஆர்பியை தங்கம் விலை போல கன்னாபின்னாவென்று எகிற வைத்த பெருமையும் இந்த முத்தத்தையே சேரும்.

அதற்குப்பின் ஐந்து சீசன்கள் கடந்து விட்டன ஆனாலும் அந்த ஒத்த மருத்துவ முத்தத்திற்கு ஈடாக பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த சீசனில் அது நடந்தே விட்டது. ஐஷு-நிக்ஸன் செய்த வேலையால் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் பற்றி எரிந்து வருகின்றன.

சுமார் 2 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பும் ஜிவ்வென வைரலாகி வருகிறது. இருவரும் கதவுக்கு அந்த பக்கமும், இந்த பக்கமுமாக இருக்கின்றனர். சத்தம் கேட்குமே என்று மைக்கை கழற்றி வைத்து விட்டனர்.மாறி, மாறி முத்தம் கொடுத்து கண்ணாடி கதவுகளை ஈரமாக்கி பார்ப்பவர்கள் நெஞ்சு பற்றியெரியும் அளவுக்கு முத்தம் கொடுத்து வைத்துள்ளனர்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இது அதுல்ல என வடிவேலு போல மீம்ஸ் போட்டு ஆரவ்-ஓவியாவுடன் இருவரையும் கம்பேர் செய்து ஜாலி செய்து வருகின்றனர். இந்த முத்தம் உலகநாயகன் கவனத்துக்கு வருமா? வந்தால் அதற்கு ஐஷு-நிக்ஸன் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

manju

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.