Cinema News
மத்த ஹீரோ இதெல்லாம் பண்ணுவாங்களானு தெரியல! விஜய் குறித்து லியோ பட தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்
Lalith about Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருந்து வருகிறார். அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். தளபதி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜய் இப்போது அரசியலிலும் கால் பதிக்க வருகிறார்.
அதற்காக சில பல முன்னேற்பாடுகளை தன் மக்கள் இயக்கம் சார்பாக செய்து வருகிறார் விஜய். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் படம் வெற்றி நடைப் போட்டு வருகிறது.
இதையும் படிங்க: BiggBoss7: இந்த சீசனோட ‘மருத்துவ’ முத்தம் இதான் போல… தாளிக்கும் ரசிகர்கள்!
விமர்சன ரீதியாக திருப்தி படுத்தவில்லை என்றாலும் வசூலில் எப்போதும் போலவே விஜய் சக்கரவர்த்தியாகவே இருக்கிறார். கிட்டத்தட்ட 461 கோடி வரை வசூல் செய்திருப்பதாக லியோ பட தயாரிப்பாளர் லலித் அண்மையில் ஒரு பேட்டியில் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் விஜயால் இந்தளவு வளர்ச்சி பெற முடிந்தது என்றால் அதற்கு காரணமான சில விஷயங்களை லலித் கூறினார். அதாவது காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கும் போது விஜய்க்கு ஒரு வார காலம் படப்பிடிப்பு இல்லாமல் இருந்ததாம்.
இதையும் படிங்க: BiggBossSeason7:நெஜமாவே ‘டபுள்’ எவிக்ஷன் தான் போல… அந்த ‘ரெண்டு’ பேரு யாருன்னு பாருங்க!
அந்த நேரம் விஜய் சென்னை வந்து விட்டாராம். அவர் சென்னை வந்தாலும் காஷ்மீரில் மற்றவர்களை வைத்து படப்பிடிப்பை எடுத்துக் கொண்டிருக்கும் படக்குழுவினரிடம் இன்று படப்பிடிப்பு நன்றாக போனதா? யாரெல்லாம் வந்தார்கள்? என்று விசாரிப்பாராம்.
இது லியோ படம் மட்டுமில்லாமல் அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகிறாராம். டப்பிங் சமயத்திலும் அவர் வேலை முடிந்தது என சும்மா இருக்காமல் மற்றவர்கள் வந்து பேசினார்களா? எப்படி வந்துச்சு என தொடர்ந்து ஒரு நாள் கூட விடாமல் போன் செய்து கேட்டுக்கொண்டே இருப்பாராம்.
இதையும் படிங்க: லியோ கலெக்ஷன் பற்றிய கேள்விக்கு நைஸா கழண்ட லோகேஷ் கனகராஜ்!.. செகண்ட் ஹாஃப் மொக்கைன்னு ஒத்துக்கிட்டாரு!..
இதை மற்ற நடிகர்கள் செய்வார்களா என தெரியவில்லை. ஆனால் விஜய் இதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். இதுதான் அவரின் வளர்ச்சிக்கு காரணம் என லலித் கூறினார்.