இது தான் கெட்ட நேரமோ..! 4 லட்சத்தினை உடனே கட்ட முடியாமல் திணறும் அண்ணாமலை குடும்பம்..!

Published on: October 30, 2023
---Advertisement---

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஹாஸ்பிடலில் நினைவு இல்லாமல் இருக்கும் அண்ணாமலை குறித்து சீப் டாக்டர் வந்து தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என்றும் டாக்டர் சொல்லி விடுகின்றனர். குடும்பமே வருத்தமாக இருக்கிறது.  முத்து அவருக்கு எதுவும் ஆகாது. காலையில் வீட்டுக்கு போய்விடலாம் என புலம்பி கொண்டு இருக்கிறார். இதை பார்த்த விஜயாவும் அழுதுக்கொண்டு இருக்கிறார். 

அடுத்ததாக மீனாவுக்கு இந்த விஷயம் தெரிந்த பூக்கட்டும் பெண் மூலம் தெரிய வருகிறது. மீனா பதறியடித்து ஹாஸ்பிடலுக்கு வருகிறார். அந்த நேரம் பார்த்து முத்து டாக்டரை பார்த்து பேச சென்று விடுகிறார். மீனா வந்ததும் எல்லோரும் அவரை திட்டிகின்றனர். 

இதையும் படிங்க: கழுத்துல என்ன நாய் சங்கிலியா?.. காவாலா தமன்னாவை கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்!..

விஜயா நீ அவரைப் பார்த்தாலே அவருக்கு ஏதாவது ஆகிடும். இங்கிருந்து போ என்று திட்டுகிறார். மாமா 100 வருஷத்துக்கு மேல ரொம்ப நல்லா இருக்கணும். நான் போய்டுறேன். அவர் எனக்கு கடவுள் மாதிரி எனக் கூறிவிட்டு அழுதுக்கொண்டே சென்று விடுகிறார். 

பிறகு அங்கு வரும் சீப் டாக்டர் அண்ணாமலைக்கு இதயத்தில் நான்கு அடைப்பு இருக்கிறது. இதில் இரண்டை மாத்திரை மூலம் குணப்படுத்தி விடலாம். ஆனால் இன்னும் இரண்டுக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். டாக்டர் இன்று மட்டும் தான் இங்கு இருப்பார்.

உடனே நான்கு லட்ச பணத்தினை ரெடி பண்ணுங்க எனக் கூறிவிட்டு செல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். இவ்வளவோ பணத்துக்கு எங்க போக என கலங்கி நிற்கிறார். அந்த சமயத்தில் அழுதுக்கொண்டே வரும் மீனா கோயிலுக்குள் செல்கிறார்.

இதையும் படிங்க: அண்ணா உட்ருண்ணா!.. லியோ ஃபிளாஷ்பேக்கே பொய்யாம்.. உருட்ட ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்!..

என் மாமா ரொம்ப நல்லவரு. அவருக்கு ஏன் இப்படி ஒரு சோதனையை கொடுக்கிற. அவருக்கு எதுவும் ஆகக்கூடாது என வேண்டிக்கொண்டு தலையில் தண்ணி ஊத்திக்கொண்டு கோயிலில் உருண்டு கொடுப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.