மாஸ் இயக்குனரின் படத்தை மிஸ் பண்ண தளபதி!.. இந்த கதையில நடிச்சிருந்தா லெவல் வேற மாதிரி!..

Published on: October 30, 2023
---Advertisement---

Vijay: தளபதி விஜய் எப்போதுமே கமர்ஷியல் ஹீரோவாக தான் இருந்து வருகிறார். கடைசியாக வெளிவந்த பீஸ்ட், லியோ அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக காட்ட படம் பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் விஜய் தன்னுடைய கேரியரில் மிஸ் செய்த ஒரு படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக திரைக்கு வந்தவர் விஜய். முதல் சில படங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டார். படமும் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அவரால் முன்னேற முடியுமா என பலரும் யோசித்தநிலையில் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை உருவாக்கி விட்டார்.

இதையும் வாசிங்க:பிரேமம் பட இயக்குனருக்கு இப்படி ஒரு திடீர் பாதிப்பா..? அரிய வகை பிரச்சனையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்

இந்நிலையில் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தன்னுடைய பேட்டியில் விஜயிற்காக அவர் செய்த கதை குறித்தும், தவறிய வாய்ப்பு குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த பேட்டியில் இருந்து, முதலில் விஜயை நான் பார்க்கும் போது அவர் பெரிய நடிகராக இல்லை.

எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இவர் நடிக்க போகிறார். நீங்க தான் ஆதரவு கொடுக்க வேண்டும் என வாழ்த்த சொல்லி கேட்டார். அடுத்து கவிதாலயா நிறுவனத்தில் கீழ் கரண் அர்ஜூன் என்ற இந்தி படத்தின் ரீமேக் உருவாக இருந்தது. அதில் விஜய் தான் நடிக்க இருந்தார்.

இதையும் வாசிங்க: உன்ன நடிக்க வச்சதுக்கு நல்லா பண்ணிட்டம்மா… தயாரிப்பாளரையே அலறவிட்ட எஸ்.ஜே.சூர்யா பட நடிகை…

நானும் கமல்ஹாசன் நாயகன் படத்தினை அவர் 35 வயதில் தான் செய்தார். அதனால் செய்யலாமே எனக் கேட்டேன். எனக்கு செட்டாகுமா எனத் தெரியவில்லை. அதற்கு என்னை வளார்த்து கொண்டு வருகிறேன் எனக் கூறி மறுத்துவிட்டார். இப்படி நிறைய முறை அவருடன் இணைய இருந்தது தட்டி போனதாக குறிப்பிட்டார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.