Connect with us

Bigg Boss

பிரதீப்பை விட நிக்சன் தான் என்னை தப்பா பேசுனான்… அக்காவ இப்டியா பேசுவாங்க… வினுஷா சொல்லும் ஷாக்..!

Biggboss Tamil: ஒரு காலத்துல எப்படி இருந்த ஷோ என்ற வாக்கியம் பக்காவாக பொருந்து நிலைக்கு வந்து இருக்கிறது பிக்பாஸ் தமிழின் 7வது சீசன். லைவ் ஷோ என்பதால் மொத்த நேரமும் அவர்கள் செய்யும் விஷயமும் அப்பட்டமாக தெரிந்தது. இதனால் இந்த சீசனில் இன்னும் பல ட்விஸ்ட்டுக்களை சந்தித்து இருக்கிறது.

பெரும்பாலும் தமிழ் பிக்பாஸ் சீசனில் ரொம்பவே கவனமாக எடிட்டிங் இருக்கும். கொச்சையாக பேசுவது, அவதூறாக நடந்து கொள்வது இப்படி செய்பவர்களை கமல்ஹாசன் வன்மையாக கண்டித்து விடுவார். அதுப்போலவே கடந்த சில வாரமாக ப்ரதீப்பை தொடர்ச்சியாக கண்டித்து வருகிறார்.

இதையும் படிங்க: சிவாஜியை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆரை மட்டும் இயக்கலையாம்.. ஏன் தெரியுமா..?

இதில் கடந்த வாரம் வெளியேறி இருந்தார் நடிகை வினுஷா தேவி. பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து இருந்தவருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் தன்னுடைய ஆட்டத்தினை தொடங்கவே முடியாமல் ஒரு கட்டத்தில் குறைவான வோட்டால் வெறியேறி விட்டார்.

பின்னர் இந்த வார ஷோவில் கூட ப்ரதீப் வினுஷாவை நான் எவ்வளவு அசிங்கமா கேட்டு இருக்கேன் என்பதை பெருமையாக சொல்லி கொண்டார். அப்போதே ரசிகர்கள் இதனால் தான் அவரால் விளையாட முடியாமல் வெளியேறி விட்டாரோ என சந்தேகப்பட்டனர். 

இதையும் படிங்க: நம்பியாரை பார்த்து சிரித்த சிவாஜி.. ரூமுக்கு போயிட்டு வந்து முறைத்தாராம்.. இது என்ன கதையா இருக்கு..!

ஆனால் தற்போது வினுஷா அளித்திருக்கும் பேட்டியில், தன்னையும் அங்கு நிறைய கொடுமைப்படுத்தினர். இதில் மாயா, ப்ரதீப் செஞ்சதை கூட மன்னித்து விடுவேன். ஆனால் நிக்சன் என்னை பாடிசேமிங் செய்தான். அதுவும் என்னை அவன் அக்கா எனக் கூப்பிட்டு அப்படி அசிங்கமாக பேசியது எனக்கே அதிர்ச்சி தான் எனக் குறிப்பிட்டார்.

அந்த பேட்டியில், அங்கு என்னை நிறைய பேர் புல்லி செய்தனர். அதுவும் கண்டெண்ட்டுக்காக செய்தனர். இதில் நிக்சன் என் உடல் குறித்து தவறாக பேசி இருந்தான். அதுவும் பெண் போட்டியாளரை பேசியதே தப்பு. இதில் என்னை அக்காவாக நினைத்த நீ அப்படி பேசலாமா எனக் கேட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Continue Reading

More in Bigg Boss

To Top