Connect with us
rajini

Cinema News

சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான்னு சொன்னீங்கள்ள!.. அப்புறம் ஏன் இத பண்றீங்க? விஜயை சீண்டும் ரஜினியின் குடும்ப வாரிசு

Vijay talk about rajini: சமீபத்தில்தான் விஜயின் லியோ பட வெற்றி விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து  கொண்டனர். வெற்றிவிழாவையும் தாண்டி இது ஒரு அரசியல் மேடையாகவும் ரசிகர்கள் பார்த்தனர்.

அந்தளவுக்கு விழாவில் அமைந்த பேச்சுக்கள் அமைந்தன. மன்சூர் அலிகான் விஜயை ‘தமிழகத்தின் நாளைய தீர்ப்பை எழுத போகிறார். அதனால் அவர் தொண்டர்கள் எல்லாவற்றிற்கும் ரெடியாக இருங்கள், நானும் உங்களுடன் துணை நிற்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க:ஆயிஷாவை கண்ட இடத்தில் தொடும் நிக்சன்.. இதுங்களுக்கு கொடுங்க ரெட் கார்ட்..! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்..!

விஜய் பேசும் போது சில உவமைகளை முன்வைத்து மறைமுகமாக ஒரு சில பேரை தாக்கி பேசுவது மாதிரி இருந்தது. இயக்குனர் பேரரசு கூட அந்த அப்பா சட்டை கதை ரஜினிக்காக பேசியதுதான். அதில் அரசியல் இல்லை என்று கூறினார்.

அதாவது முன்பு ஒரு மேடையில் ரஜினியே ‘இந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி நிரந்தரமானதில்லை, யார் வேண்டுமென்றாலும் வரலாம்’ என்று கூறியிருந்தாராம். அதனால் ரஜினியை அப்பாவாக நினைத்து அவர் நாற்காலியில் உட்கார கூடாதா? அவர் கடிகாரத்தை போட்டு பார்த்து அழகு பார்க்க கூடாதா? என்று அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என சொல்லாத விதமாக சொன்னார்.

இதையும் படிங்க: கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய திரையுலகம்!.. சவால் விட்டு சாதித்து காட்டிய பாரதிராஜா…

இதற்கு பதிலடியாக ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும் நடிகையுமான மதுவந்தி ஒரு பேட்டியில் ‘அவ்ளோ பெரிய மேடையில் சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தர்தான் என்று சொன்னீங்கள? அப்புறம் எதுக்கு கம்பேர் பண்ணி பேசுறீங்க? சூப்பர் ஸ்டார் ரெக்கார்டை அவர் ஒருத்தராலதான் பிரேக் பண்ண முடியும்’

‘வெறு யாரும் பிரேக் பண்ண முடியாது. அது இறைவன் கொடுத்தது. இந்த பர்சனாலிட்டி, பொறுமை இதுதான் ரஜினியோடு பெரும் பலம். கம்பேர் பண்ணிக்கிட்டு குத்தி குத்தி பேசுறது எல்லாம் சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கு’ என மிகவும் ஆவேசத்துடன் கூறினார்.

இதையும் படிங்க: இது மட்டும் தான் அவரு கண்ணுக்குத் தெரியும்….! ஷங்கரைக் கழுவி ஊற்றும் பிரபலம்

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top