டவுசர் கூட போட மாட்ட! நீதான் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுப்பியா?!.. வீடியோ ஆதாரத்தோடு கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Published on: November 6, 2023
---Advertisement---

Pradeep vs Kamal: தமிழ் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் ப்ரதீப்புக்கு ரெட் கார்டை கொடுத்து விட்டு கமல் படும் அவதி ரொம்பவே அதிகம் போல ரசிகர்களும் வச்சு செய்து கொண்டு இருக்கின்றனர். அவரின் பழைய வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வார இறுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி ப்ரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார் கமல்ஹாசன். இது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. பழைய போட்டியாளர்கள் கூட தவறு என ட்வீட் தட்டினர்.

இதையும் படிங்க:ஆயிஷாவை கண்ட இடத்தில் தொடும் நிக்சன்.. இதுங்களுக்கு கொடுங்க ரெட் கார்ட்..! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்..!

ரசிகர்கள் ஒரு பக்கம் அதிகமாக போய் கமலின் லீலைகள் என பழைய வீடியோக்களை இணையத்தில் உலா விட்டு அதிர விடுகின்றனர். அந்த வகையில் கமல் குறித்து நடிகையும், அவரின் அண்ணன் மகளுமான சுஹாசினி தெரிவித்து இருக்கும் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

அந்த வீடியோவில் கமல் என்னை அடிக்கடி காலேஜில் ட்ராப் செய்வார். வீட்டில் கராத்தே செய்வது அவர் பழக்கம். ஆனால் மேலாடை மட்டும் போட்டுக்கொள்வார். கீழே பேண்ட் போட்டு இருக்கமாட்டார். அவரின் பாக்ஸர் மட்டும் இருக்கும்.

இதையும் படிங்க: கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய திரையுலகம்!.. சவால் விட்டு சாதித்து காட்டிய பாரதிராஜா…

அப்படி இருக்கும் போது நான் காலேஜ் கிளம்பினால் வா நான் கொண்டு போய் விடுறேன் என்பார். இப்படியே வா. பேண்ட் போட்டு வாங்க ப்ளீஸ் என்பேன். அட நான் கீழேயே இறங்கவே மாட்டேன். நான் பெரிய ஸ்டார் என சத்தியம் செய்யாத குறையாக என்னை கூட்டி செல்வார். ஆனால் காலேஜில் காரை நிறுத்தி கீழே இறங்கி வந்து என் கதவை திறப்பார்.

மொத்த குயின் மேரிஸ் பெண்களும் அப்பட்டமாக அவரை பார்த்து கொண்டு நிற்பார்கள். எனக்கே மானம் போகும் எனச் சொல்லி இருந்தார். கமல் அந்த வயதில் செய்த லீலைகளை விடவா ப்ரதீப் செய்துவிட்டார். ஒரு ரெட் கார்டு கொடுத்து தன்னுடைய மொத்த கேரியரை சந்திக்கு இழுத்து போட்டு கொண்டார் நடிகர் கமல்ஹாசன். இன்னும் என்ன விஷயமெல்லாம் வரப்போகிறதோ என்பதை பார்க்கலாம்.

 

சுஹாசினி வீடியோ: https://twitter.com/ThalaAsar/status/1721093517131596073

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.