Connect with us

Cinema News

தங்கத்தில் விளையாடிய ஹரோல்ட் தாஸ்.. மகள் நிச்சயத்தார்த்த விழாவில் நடந்த ஆச்சரியங்கள்..!

Aishwarya arjun: ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. பாக்க சிம்பிள்ளாக தெரிந்தாலும் மிக பிரம்மாண்டமாகவே நடந்து இருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி கலந்து கொண்ட போது அவருடன் நெருங்கி பழகிய ஐஸ்வர்யாவுக்கு அவர் மீது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரின் காதலை அர்ஜூனிடம் கொண்டு செல்ல அவரும் உமாபதியை தெரிந்து கொண்டதால் உடனே ஓகே சொன்னாராம்.

இதையும் படிங்க: லோகேஷுக்கு அடுத்து இவர்தான்!. ரஜினி டிக் அடித்த இயக்குனர்.. தலைவர் 172 பரபர அப்டேட்..

தம்பி ராமையா தரப்பில் இருந்து ஐஸ்வர்யா இனி நடிக்க கூடாது என்பதை தவிர மற்ற பிரச்னைகள் எதுவுமே இல்லையாம். இதையடுத்து இவர்கள் நிச்சயத்தார்த்தம் கடந்த அக்டோபர் 28ந் தேதி அர்ஜூனின் சொந்த ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது.

ஆனால் பார்ப்பதற்கு தான் சிம்பிள் இருப்பதிலையே காஸ்ட்லியான நிகழ்வு இது தான் என ஒளிப்பதிவாளர் சுதர்சன் தெரிவித்துள்ளார். அவர் அளித்து இருக்கும் பேட்டியில் இருந்து, ரொம்ப லைட் கலரில் தான் மொத்த நிகழ்ச்சியும் இருக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டனர்.

இதையும் படிங்க: இப்படி ஒரு பதிவை போடுவாங்கனு எதிர்பார்க்கல! ஐஸுவின் செயலால் மனமுடைந்த அம்மா

ஐஸ்வர்யாவுக்கு 5 கேரட் ரூபி மோதிரத்தினை உமாபதி அணிவித்து இருந்தார். இது முழுக்க முழுக்க ஒரு காதல் திருமணம் தான். மாதப்பட்டி ரங்கராஜ் தான் சமைத்தார். மொத்த மாநிலத்தில் இருந்து எல்லா வெரைட்டியும் செய்து இருந்தார்கள். சாப்பிட்டவர்களுக்கு தங்க தட்டில் தான் பறிமாறப்பட்டது.

உமாபதி மற்றும் அர்ஜூன் இருவரும் நண்பர்கள் மாதிரி தான் இருப்பார்கள். அப்படி ஒரு புரிதல் இருந்தது. அர்ஜூன் மனைவியும் பெண்ணோட நிச்சயம் என்பதால் ரொம்பவே எமோஷனலாகவே இருந்தாங்க. ஒட்டுமொத்த நிகழ்ச்சியுமே ரொம்ப சிம்பிள்ளாக இருந்தது. ஆனால் ரிஸ்க் நிறைய தான் எனவும் குறிப்பிட்டு இருந்தார். 

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top