Cinema History
ஏறி வந்த ஏணிய எட்டி உதைச்சிட்டாங்க!. இதுதான் சினிமா!.. சூர்யா – கார்த்தி பற்றி புலம்பும் அமீர்….
இயக்குனர் அமீருக்கும், கார்த்தி, சூர்யாவுக்கும் என்ன பிரச்சனை? இதுகுறித்து அமீர் என்ன சொல்கிறார்னு செய்தியாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
பாலாவுக்கு பக்க துணையாக இருந்தவர்கள் இருவர் அமீர், சசிக்குமார். பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்தவர் பாலா. இவர் தனது சேது படத்துக்கு கேரக்டர் ஆர்டிஸ்ட்டுக்கு ஆள் தேடி அலைந்தார். யாருமே கிடைக்கவில்லை.
கடைசியில் சிவகுமாரிடம் போய் சொல்கிறார். ஹீரோவுக்கு அண்ணன் கேரக்டர். நடிக்க சம்மதித்து விடுகிறார் சிவகுமார். படமும் வெளியாகி சக்கை போடு போட்டது. இதுக்குக் கைமாறா இவருக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறார் பாலா. சிவகுமார் மகன் சூர்யாவ கெத்தா காமிக்கணும்னு ஒரு படம் எடுக்கிறார் பாலா. அதுதான் நந்தா.
பாலாவோட டென்சன் அமீருக்கும், சசிகுமாருக்கும் தான் தெரியும். இது சூர்யாவுக்குத் தெரியாது. ஒரு சமயம் பாலா சூட்டிங்ஸ்பாட்ல சூர்யாவுடன் கோபப்பட்டுக் கத்திருக்காரு. உடனே அமீர் பார்த்துட்டு சூர்யாவை ஓரமாக கூட்டிட்டுப் போயி இப்படி இப்படி நடிச்சா கரெக்டாயிடும்னு சொல்லிக் கொடுத்துருக்காரு.
ஒவ்வொரு காட்சிக்கும் இப்படியே அவரை டெவலப் பண்ணதனால சூர்யாவுக்கும், அமீருக்கும் நல்ல நட்பு உருவானது. படம் வெளியாகி செம மாஸ். ஒரே படத்துல சூர்யாவோட ரேஞ்சே மாறுது. அடுத்து சூர்யாவை வைத்து அமீர் இயக்கிய படம் மௌனம் பேசியதே. செம மாஸான படம். லவ் பண்ணாதவங்களுக்கும் படத்தைப் பார்த்தா லவ் பண்ணனும்கற எண்ணம் வரும்.
பருத்திவீரன் படத்துக்காக தேனில படப்பிடிப்பு. மே மாசம். உச்சி வெயில். கார்த்தி நடிக்கிறார். தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோன்னு நினைக்கிறார். இந்த மாதிரி முடிவளர்க்கணும். கருப்பா இருக்கணும். வெயில்ல நிக்கணும்னு ஆர்டர் போடுகிறார் அமீர். இது அவரோட சொந்த படம். இடையில பஞ்சாயத்து வருது. சிவகுமாரிடம் சொல்கிறார். எல்லாத்தையும் கடந்து படம் முடிஞ்சி வெளியானது. சூப்பர் ஹிட்.
தற்போது கார்த்தி, சூர்யா அமீருக்குள் மனக்கசப்பு. சமீபத்தில் நடந்த கார்த்தி 25, ஜப்பான் ஆடியோ வெளியீட்டு விழாவுக்குக் கூட அமீருக்கு அழைப்பு இல்லையாம். இது குறித்து சூர்யாவிடம் கேட்டபோது அழைப்பு அனுப்பினோம். ஆனா வரலன்னு சொல்றாரு. அமீர் இதுபற்றி சொல்றப்ப, அழைப்பு எப்படி அனுப்பணும்னு ஒரு முறை இருக்குல்ல.
பி.ஆர்.ஓ, மேனேஜர், வாட்ச்மேனு இவங்கக்கிட்ட இன்விட்டேஷன கொடுத்தா வந்துருவாங்களா… கூப்பிடுறதுக்குன்னு ஒரு முறை இருக்குல்ல. அது என்னைப் பொறுத்த வரைக்கும் கூப்பிடலன்னு தான் அர்த்தம். அவ்ளா தான் சினிமாவுல நான் எதிர்பார்த்தது தான். ஏறிவந்த ஏணி நானு. எட்டி உதைச்சிட்டாங்க.
படம் நல்லா வந்துருக்குன்னு தெரிஞ்சதும் படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கி தனது ஸ்டூடியோகிரின் நிறுவனம் மூலம் வெளியிட்டார். பருத்திவீரன் படத்துக்கு பேசிய படி தொகை வரவில்லை என்றதால் கடுப்பாகி விட்டார் அமீர். இந்த விவகாரத்தில் சூர்யாவோ தயாரிப்பாளர் ஞானவேல் பக்கம் நிற்க இன்னும் கோபமான அமீர் பிரச்சனையை நீதிமன்றம் வரை கொண்டு சென்றார். 16 வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது. அமீர்தான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிறாரே தவிர தயாரிப்பு தரப்பிலிருந்து யாரும் ஆஜர் ஆவதே இல்லையாம்.
கார்த்தியை அறிமுகம் செய்து வைத்து ஹிட் கொடுத்த ஒரு இயக்குனரை இப்படியா ஏமாற்றி 16 வருடங்களாக அலைக்கழிப்பது!…
சினிமா உலகில் இதுவெல்லாம் சகஜம் போல!…