இவர்தான்யா அஜித்துக்கு சரியான இயக்குனர்! சும்மா பறக்கவிட்டிருப்பார் – ஆனால் கடைசி வரை சேரவிடல

Published on: November 10, 2023
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். தன் வேலை  நடிப்பது மட்டுமே என்பதில் அதிக கவனம் செலுத்தக் கூடிய மிகவும் பொறுப்புள்ள நடிகர். படத்திற்கான ப்ரோமோஷன், இசை வெளியீட்டு விழா என எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் தன் படத்திற்கான விளம்பரத்தை தானே தேடிக் கொள்ளும் என்பதில் நம்பிக்கை கொண்ட நடிகராக இருந்து வருகிறார்.

சமீபகாலமாக அஜித் பக்கா ஆக்‌ஷன் மூவிகளில்தான் ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக பைக் , கார் சேஸிங் சீன்கள்தான் அவர் படத்தில் அதிகமாக காட்டப்படுகின்றன. எந்த துறையில் அதிக ஆர்வமாக இருக்கிறாரோ அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜப்பானுக்கே காவடி எடுத்தாலும் படம் ஜெயிக்காதுடி!.. கார்த்தியை காவு வாங்கிய ஜப்பான்.. விமர்சனம் இதோ!..

துப்பாக்கி சுடுவதிலும் திறமைசாலியான அஜித் அதை துணிவு படத்தின் மூலம் நிரூபித்திருப்பார். இப்படி அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை பரவசப்படுத்தி வரும் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு வருகின்றன. படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் வெளி நாடுகளிலேயே படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மாதஙகளுக்கு படப்பிடிப்பை முடித்து ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: ஏறி வந்த ஏணிய எட்டி உதைச்சிட்டாங்க!. இதுதான் சினிமா!.. சூர்யா – கார்த்தி பற்றி புலம்பும் அமீர்….

ஆக்‌ஷன் சார்ந்த படங்களிலேயே நடித்துவரும் அஜித் குடும்ப பாங்கான படங்களில் நடித்து சில வருடங்கள் ஆகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இந்த நிலையில் இயக்குனர் ஹரியுடன் அஜித் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்ததாம்.

அவர்கள் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருந்ததாம். ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து என்ன ஒரு காரணத்தினாலோ அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே போனதாம்.ஒரு வேளை ஹரியும் அஜித்தும் இணைந்திருந்தால் படம் வேற லெவல்ல இருந்திருக்கும். சும்மாவே ஹரியின் படங்களில் கார் சீன்கள் எல்லாம் தூள் பறக்கும். இதுதானே அஜித்துக்கும் வேணும்!.

இதையும் படிங்க: மெர்சல் ஆக்கிட்ட!.. அப்படியே அள்ளுது!.. கிளுகிளுப்பு காட்டும் தளபதி 68 பட நடிகை!..