Cinema History
தித்திக்கும் தீபாவளியை மையமாகக் கொண்ட தமிழ் படங்கள் – ஒரு பார்வை
விடிந்தால் தீபாவளி… பண்டிகைகளிலேயே மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும் இந்த இனிய நாளில் தமிழ்ப்படங்களில் பட்டாசாய் தெறிக்க விட்ட தலைப்புகளைக் கொண்ட படங்கள் பற்றி பார்ப்போம்.
தீபாவளி
தலைப்பிலேயே தீபாவளி உள்ளது. 2007ல் எழில் இயக்கத்தில் உருவான படம். ஜெயம் ரவி, பாவனா, ரகுரவன், விஜயகுமார், லால், கொச்சின் ஹனிபா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
வெடி
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு சட்டென வருவது வெடி தான். இதே பெயரில் படமும் வந்துள்ளது. பிரபுதேவாவின் இயக்கத்தில் 2011ல் வெளியான படம். விஷால், சமீரா ரெட்டி, பூனம் கவுர் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு ஆக்ஷன் படம் என்பதால் படத்தில் சண்டைக்காட்சிகள் தலைப்புக்கு ஏற்றவாறு சரவெடியாக உள்ளன.
துப்பாக்கி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான சூப்பர்ஹிட் படம். 2011ல் வெளியான படத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பட்டி தொட்டி எங்கும் ஓடி பட்டையைக் கிளப்பியது.
சிவகாசி
படத்தின் பெயரே சிவகாசி என்றால் சண்டைக்காட்சி இல்லாமலா இருக்கும். பட்டாசாய் படபடக்கும் அல்லவா? தளபதி விஜயின் அதிரடி திரைப்படம்.
பேரரசுவின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ஆக்ஷன் படம். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க பாடல்கள் எல்லாமே ஹிட். அசின் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், வையாபுரி, சிட்டி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்காக நடித்துள்ளார்.
கிங்காங்
2005ல் வெளியான படம். இது ஹாலிவுட் படத்தின் டப்பிங். பீட்டர் ஜாக்சன் இயக்கியுள்ளார். நவோமி வாட்ஸ், ஜேக் பிளாக் உள்பட பலர் நடித்துள்ளனர். கிங் காங் என்ற ராட்சத கொரில்லா தான் படத்தின் ஹீரோ. காட்சிக்குக் காட்சி இது செய்யும் களேபரங்கள் நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்து விடும். பட்டாசு கடைகளில் ரொம்பவே பாப்புலரான ரகம் இது. இந்தப் பெயரில் படம் வந்திருக்கிறது.
பட்டாஸ்
2020ல் ஆர்.எஸ்.துரை இயக்கத்தில் வெளியான படம். தற்காப்பு கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்சாதா உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார். வில்லனாக நவீன் சந்திரா நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக சினேகா தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டார்.