Connect with us
rajinikanth

Cinema History

ஊரு ஆயிரம் பேசட்டும்!… ஆனா தலைவரோட வழி தனி வழி!… சம்பவம் என்னன்னு தெரியுமா?..

Actor Rajinikanth: தமிழில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவருக்கு துணைகதாபாத்திரத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சம்பளமும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஆனால் சற்றும் மனம் தளராத ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துவந்தார். இவர் பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் பின் முரட்டு காளை, அண்ணாமலை, முத்து போன்ற பல திரைப்படங்களின் மூலம் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

இதையும் வாசிங்க:தக்காளிய வச்சு குட்டி ஸ்டோரி சொன்ன ரஜினிகாந்த்… யாருக்கு சொன்னாரு தெரியுமா?…

பொதுவாக ரஜினி ஒரு சுயநலவாதி மற்றவருக்கு எந்த உதவியும் செய்ததில்லை என்று பல கருத்துகள் உலாவின. ஆனால் இவரின் உதவும் குணத்திற்கு இவர் வாழ்வில் நடந்த சம்பவமே ஒரு சான்று. இவர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சந்திரமுகி. இப்படத்தில் ஃபைட் மாஸ்டராக பணியாற்றியவர்தான் தளபதி தினேஷ்.

இப்படத்தின் கன்னட வெர்ஷனில் நடித்த விஷ்ணுவர்தன் ஒரு சண்டை காட்சியில் காலை தூக்கி சில நிமிடங்கள் வைத்து நிற்பார். அதைபோல என்னை நிற்க வைக்க முடியுமா என தளபதி தினேஷிடம் கேட்டாராம். உடனே அவரும் நான் நிற்க வைத்து காட்டுகிறேன் என கூறினாரம். உடனே ரஜினி அப்படி நீங்கள் என்னை நிற்க வைத்தால் உங்களுக்கு 20000 ரூபாய் தருகிறேன் என கூறினாராம்.

இதையும் வாசிங்க:ரஜினியின் சூப்பர் ஹிட் பட ரீமேக்!. அந்த நடிகர் மட்டுமே நடிக்க முடியும்!.. அட இயக்குனரே சொல்லிட்டாரே!..

பின் தளபதி தினேஷும் சந்திரமுகி படத்தின் முதல் சண்டையில் ரஜினியை அப்படி நிற்க வைத்துவிட்டாராம். உடனே தினேஷ் மாஸ்டர் ரஜினி நமக்கு 20000 ரூபாய் தருவார் எனும் ஆசையில் இருந்துள்ளார். பல முறை ரஜினி முன் சென்று நிற்பாராம். ஆனால் ரஜினி அவரை கண்டுக்கவில்லையாம். பின் ஒரு நாள் தளபதி தினேஷை ராகவேந்திரா மண்டபத்திற்கு வரசொன்னாராம்.

தளபதி தினேஷும் தனது குடும்பத்தையே அழைத்து சென்றாராம். அங்கு ரஜினி இவருக்கு 7 பவுனில் செயினை பரிசளித்தாராம். பரிசை கொடுத்துவிட்டு நான் உங்களுக்கு 20000ரூபாய் தரவேண்டும் என்பதை மறக்கவில்லை. உங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கென செலவுக்கு பணம் தேவைப்படும். வெறும் 20000ரூபாயில் அதை தீர்க்க முடியாது. அதனால் இந்த செயினை வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு உதவும் என கூறினாராம். இவ்வாறு ரஜினி தான் எப்படிபட்டவர் என்பதை காட்டிவிட்டார் என தளபதி தினேஷ் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:அப்போ ரஜினியை சரியாக கவனிக்கல!.. இப்போ வருத்தப்படுறேன்!.. புலம்பும் இயக்குனர்…

google news
Continue Reading

More in Cinema History

To Top