Connect with us

Cinema News

ஷங்கர், லோகேஷ் கனகராஜ்லாம் ஜப்பான் படத்தை பார்க்கவே இல்லையே?.. கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை மாறன்!..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா 2 படத்தை பிரபல இயக்குனர்கள் பாராட்டி வரும் நிலையில், கார்த்தி நடித்த ஜப்பான் படத்தை அவரது அண்ணன் சூர்யா கூட பார்த்து விட்டு பாராட்டி போடவில்லை என்றும் எந்தவொரு பிரபலமும் பாராட்டவில்லை என ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்துள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு நடிகர் விஜய்க்கு எதிராக செய்த சதிக்கான பின் விளைவு தான் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படம் படுதோல்வியை சந்திக்க காரணம் என்கின்றனர்.

இதையும் படிங்க: சரத்குமார் மீது செம கடுப்பில் இருந்த விஜயகாந்த்… கடைசில நடந்தது இதுதான்!..

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட பல பிரபலங்கள் பங்கேற்காத நிலையில், அனைவரும் கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொண்டனர்.

இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், எச். வினோத் உள்ளிட்ட பல இயக்குனர்களும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால், படம் வெளியான பிறகு ஒரு பிரபலம் கூட ஜப்பான் நல்லா இருக்கு என பொய் சொல்லி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என தெரிகிறது.

இதையும் படிங்க: கமலிடமே வேலை காட்டிய லவ் டுடே பிரதீப்!.. ஒத்து ஊதி பல்பு வாங்கிய விக்னேஷ் சிவன்!.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

”ஜிகர்தண்டா 2 வை பாராட்டிய இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், பொன்ராம், புஷ்கர் காயத்ரி, விக்னேஷ் சிவன், மாரி செல்வராஜ், அறிவழகன், நெல்சன்.

நடிகர்கள் சிம்பு, தனுஷ்.

இந்த பாராட்டுகளை எல்லாம் கார்த்திக் சுப்பராஜ் ரீ ட்வீட் செய்துள்ளார்.

இவர்களில் ஒருவர் கூட ஜப்பான் படத்தை பார்க்கவில்லை. தப்பித்தவறி பார்த்திருந்தாலும் படத்தை பாராட்டவில்லை.

வெரிகுட்.” என பதிவிட்டு பிரபலங்கள் மத்தியில் சண்டையை கொளுத்திப் போட்டுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top