ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் வசூல் இத்தனை கோடியா..? ஜப்பான் படத்தினை தூக்கி சாப்பிட்ட பக்கா சம்பவம்..!

Published on: November 14, 2023
---Advertisement---

Jigarthanda Double X: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வின்னராகி இருக்கும் நிலையில் வசூல் குறித்த ஆச்சரிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் மற்றும் இன்வெனியோ ஆரிஜின் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: டாக்டர் ஓகே சொன்ன பிறகு ஷூட்டிங் வந்த நடிகர்!.. தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரின் நல்ல மனசு!..

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படம் தீபாவளி ரிலீஸாக சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் என்றாலும் முதல் படத்துடன் எந்த சம்மந்தமும் இல்லை. 1970களில் நடக்கும் கதை என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து இப்படத்துடன் கார்த்தியின் ஜப்பான் படமும் ரிலீஸானது. ஆனால் ஜப்பான் திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவிய நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான் தீபாவளி ரேஸில் வெற்றி பெற்று இருக்கிறது. படம் முதல் நாளை விட அடுத்ததடுத்த நாளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: விஜய்க்காக இத செஞ்ச நீங்க..! அத ஏன் மிஸ் பண்ணீங்க..! எஸ்.ஏ.சந்திரசேகரை சீண்டிய பத்திரிக்கையாளர்..

இதன்படி, ஜிகர்தண்டா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 2.5 கோடி ரூபாய், அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் 4.86 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் 7. 2 கோடி ரூபாயும் வசூல் செய்தது. நேற்று நான்காவது நாளில் 5 கோடி வரை வசூல் செய்ததாம்.

இதனால் ஜிகர்தண்டா படத்தின் மொத்த வசூல் நான்கு நாளில் 19 கோடியாக இருக்கிறது. அதே ரேஸில் இருந்த மற்றொரு படமான ஜப்பான் நான்கு நாளில் 12 கோடி வரை தான் வசூல் இருந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது. மேலும் இனி வரும் நாட்களில் ஜிகர்தண்டா படத்தின் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.