Connect with us

Cinema News

மன்சூர் அலிகான் மட்டுமில்லை!.. அந்த நடிகர்களும் அப்படித்தான்!. மொத்தமா வாறிய சின்மயி…

மன்சூர் அலி கான் ஆபாச காட்சிகளில் திரிஷாவுடன் பெட்ரூமில் நடிக்க வேண்டும் என படு கேவலமாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடகி சின்மயி இதைத்தான் பல ஆண்டுகளாக நானும் சொல்லி வருகிறேன். இங்கே கேட்பதற்கு ஆளே இல்லை என்றும் மன்சூர் அலி கான் மட்டுமில்லை, ரோபோ சங்கர் ஹன்சிகாவின் காலை தடவ வேண்டும் என கேட்டதும் தவறான உள்நோக்கத்துடன் தான் என்றும் ராதா ரவியும் பல முறை பலாத்கார காட்சிகளில் நடித்தது குறித்து பெருமிதமாக பேசி வருவதும் கண்டனத்துக்குரிய ஒன்று தான் என சின்மயி கிடைத்த கேப்பை வைத்து சிக்சர் அடித்து விளாசி உள்ளார்.

இதையும் படிங்க: மானங்கெட்ட மன்சூர் அலி கான்!.. இப்படியா பேசுவ.. வச்சு விளாசிய திரிஷா.. துணைக்கு வந்த லியோ இயக்குநர்!..

கூல் சுரேஷ் மன்சூர் அலி கானின் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே பெண் தொகுப்பாளினியுடன் தப்பாக நடந்துக் கொண்டார். அந்த மேடையிலேயே அந்த பெண் முறைத்த நிலையில், மன்னிப்பும் கேட்டார்.

ஆனால், தற்போது மன்சூர் அலி கானே இப்படியொரு கொச்சையான பேச்சை தான் ஆம்பளை எதுவேணா பேசுவேன் என திமிராக பேசுவது எந்த விதத்தில் நியாயம். பவரில் உள்ள எந்தவொரு ஆண் நடிகரும் இதை கேட்க திராணியில்லாமல் மெளனமாக இருப்பது ஏன் என சினிமா பிரபலங்களையும் சேர்த்து விளாசி உள்ளார் சின்மயி.

இதையும் படிங்க: கலாய்த்த ரசிகர்கள்.. ஓடிப்போய் அஜித்திடம் ஒப்பாரி வைத்த வெங்கட்பிரபு.. தல சொன்னது இதுதான்…

இது போல அசிங்கமாக பேசும் நடிகர்களுக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைக்கும். ஆனால், பெண்கள் அவர்களைஎ எதிர்த்து கேள்வி கேட்டால் போதும் அதன் பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்காது இதெல்லாம் என்ன டிசைனோ தெரியவில்லை என விளாசி உள்ளார்.

 

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top