Connect with us

latest news

முத்துவை கொடுமைப்படுத்தும் மீனா.. மனோஜ் சிக்க போகும் நேரம் வந்துடுச்சே..! என்ன செய்ய போகிறார் ரோகினி..?

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் முத்துவின் காரை அண்ணாமலை மீண்டும் வாங்கி கொடுத்ததில் சந்தோஷமாகி விடுகிறார். இதையடுத்து மீனாவுக்கு நன்றி சொல்லி விட்டு எங்காவது போயிட்டு வரலாம் வா என்று கூப்பிடுகிறார்.

இதையடுத்து மீனா நான் வரணும்னா என்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகணும். முத்துவும் சரியென அவரை அழைத்து செல்கிறார். எந்த இடம் என சொல்லாத மீனா போற வழியை மட்டுமே சொல்லி கொண்டு வருகிறார். முத்து எந்த இடம் எனக் கேட்டும் மீனா சொல்லாமல் மறுத்துவிடுகிறார்.

இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் மிஷ்கின் – விஜய் சேதுபதி படம்!.. வில்லனாக களமிறங்கும் தளபதி68 பட நடிகர்…

ரொம்ப நேரம் கழித்து கடைசியாக ஒரு கோவிலில் மீனா நிறுத்த சொல்கிறார்.. சாமி கும்பிட தான் இவ்வளவு தூரம் வந்த என்கிறார் முத்து. மீனா நம்ம ரெண்டு பேரும் தான் போகணும் என்கிறார் மீனா. ஆனால் அந்த சாமியை பார்க்க கணவன் மனைவியை தூக்கிக் கொண்டு போகின்றனர்.

இதை பார்த்து முத்து ஏன் எல்லாரும் பொண்டாட்டிய தூக்கிட்டு போறாங்க எனக் கேட்கிறார். இது தான் இங்க வேண்டுதல். பொண்டாட்டியை தூக்கிட்டு தான் போணும். முத்து பதறினாலும் கடைசியில் மீனாவை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பிக்கிறார். கஷ்டப்பட்டு மேலே ஏறி வந்துவிடுகிறார். இதையடுத்து ஒரு ஜோடி தூக்கிக்கொண்டு இறங்குவதை பார்த்து முத்து அலறிவிடுகிறார்.

இருவரும் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு கீழே இறங்குகின்றனர். இதனிடையில், மனோஜ் விஜயாவிடம் காசு கேட்கிறார். ஒரு வேலையை தேடிக்கோ என அட்வைஸ் செய்தாலும் அவர் கேட்ட பணத்தினை விஜயா கொடுக்கிறார். பின்னர் ரூமுக்கு வரும் மனோஜ் ரோகினி போன் அடிப்பதை பார்த்து அட்டர்ன் செய்கிறார்.

இதையும் படிங்க: கலாநிதிமாறன் கொடுத்த கிஃப்ட் இருக்கட்டும்!. விஜய் கிஃப்ட் கொடுத்த 5 பிரபலங்கள் யார் தெரியுமா?!..

நான் ஏன் உன்னை டார்ச்சர் பண்றேன் என்கிறார். நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறத உன்கிட்ட கொடுக்கணுமா என்கிறார். நீ பெரிய இடத்துல வாழ்றதுக்கு நான் தான் காரணம். இல்ல உன் புருஷன் வேலை செய்ற இடத்துல நேரில் பார்த்து சொல்லிடுவேன் என்கிறார். சரி எங்க வரணும் எனக் கேட்க ஒரு பார்க் அட்ரஸை சொல்கிறார். சரி வரேன் என ரோகினி கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top