‘துருவ நட்சத்திரம்’ முதலில் ரஜினிக்காக சொல்லப்பட்ட கதை! ஓ இதுதானலதான் நடிக்கலயா?

Published on: November 22, 2023
dhuruv
---Advertisement---

Dhuruva Natchathiram Movie: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் 2017 ஆம் ஆண்டில் இருந்தே புரடக்‌ஷனில் இருக்கும் படமாகத்தான் அமைந்தது.

கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து பல போராட்டங்களுக்கு பிறகு திரைக்கு வர தயாராகிக் கொண்டு வருகிறது. இந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் தான் தற்போது நடந்து வருகிறது. படத்தைப் பற்றியும் படத்தில் அமைந்த அனுபவங்கள் பற்றியும் கௌதம் மேனன் மற்றும் ரித்துவர்மா பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே துரத்திய உறவினர்!.. நடுத்தெருவில் நின்ற ஜெயலலிதா.. காப்பாற்றிய நடிகர்…

இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் கௌதம் மேனன் கூறும் போது முதலில் துருவ நட்சத்திரம் படத்தைப் பற்றி 2011 ஆம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிரார் கௌதம்.

அந்த நேரம் நடிகர் சூர்யாவை வைத்துதான் துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்டரை டிஸைன் செய்திருக்கிறார்.  ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் சூர்யாவால் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

இதையும் படிங்க: கவுண்டமணிக்கும் பாரதிராஜாவுக்கும் இப்படி ஒரு பிரச்சினையா? அதிகமாக நடிக்காததற்கு இதுதான் காரணமா?

அதுமட்டுமில்லாமல் ரஜினியிடமும் இந்தப் படத்தின் கதையை கௌதம் சொன்னாராம். கதையை கேட்ட ரஜினி இந்த சீனில் ஆக்‌ஷன் இருந்தால் நன்றாக இருக்கும். அங்கு அந்த சீன் நன்றாக இருக்கும் என சில ஆலோசனைகளையும் கூறியிருக்கிறார்.

இருந்தாலும் கொஞ்சம் பொறுத்து பண்ணலாம் என்றுதான் ரஜினி சொன்னாராம். அதன் பிறகே விக்ரம் இந்தக் கதைக்குள் வந்திருக்கிறார். ஆனால் சூர்யாவை வைத்து நினைத்த கதைக்கும் இப்போது விக்ரம்  நடித்த கதைக்கும் சிறிய வித்தியாசம் இருப்பதாக கௌதம் கூறினார்.

இதையும் படிங்க: என்னை ரூமுக்கு அழைத்த டாப் நடிகர்… படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. விசித்ரா சொன்னது இவரை தானா?

அதாவது சூர்யாவை நினைக்கும் போது ஒரு ப்ளாஷ்பேக் இருக்குமாம். ஆனால் இப்போது விக்ரம் நடிப்பதால் அந்த ப்ளாஷ் பேக் இல்லையாம். ஒரு வேளை இந்தப் படம் க்ளிக் ஆகி இரண்டாம் பாகம் வரும் போது அந்த ப்ளாஷ் பேக்கை வைக்கலாம் என்று நினைத்திருக்கிறாராம் கௌதம் மேனன்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.