திரிஷாவுக்கு வரிந்து கட்டி வந்த சிரஞ்சீவி.. இளம் நடிகைகளிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோ லீக்..! நீங்கலாம் பேசலாமா?

Published on: November 22, 2023
---Advertisement---

Chiranjeevi: நடிகை த்ரிஷா குறித்து மோசமாக கமெண்ட் அடித்த மன்சூர் அலிகானுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதில் தெலுங்கு மூத்த நடிகரான சிரஞ்சீவியும் த்ரிஷாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

நடிகை த்ரிஷாவை தன்னை கற்பழிக்க விடவில்லை. 150 படங்களில் பண்ணி இருக்கேன். இதெல்லாம் என்ன புதுசா? என்ற ரீதியில் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து த்ரிஷா இப்படி பேசும் மனிதருடன் நடிக்கவே மாட்டேன் என கண்டனத்தினை தெரிவித்தார்.

இதையும் படிங்க: கவுண்டமணிக்கும் பாரதிராஜாவுக்கும் இப்படி ஒரு பிரச்சினையா? அதிகமாக நடிக்காததற்கு இதுதான் காரணமா?

தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் ஆகியோரும் கண்டனத்தினை ட்வீட் செய்து இருந்தனர். ஆனால் இதுவரை பெரும்பாலான நடிகர்கள் யாரும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. முதல் ஆளாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மட்டும் ட்வீட் போட்டு இருந்தார்.

அந்த ட்வீட்டில், த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்துக்கு வந்தது. இப்படிப்பட்ட கருத்துக்கள் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கே அருவருக்கத்தக்கதாக அமையும். இந்தக் கருத்துக்களை கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் வக்கிரத்தில் துவண்டு விடுகிறார்கள். நான் த்ரிஷாவுடன் நிற்கிறேன்.

இதையும் படிங்க: ‘துருவ நட்சத்திரம்’ முதலில் ரஜினிக்காக சொல்லப்பட்ட கதை! ஓ இதுதானலதான் நடிக்கலயா?

சிரஞ்சீவி வீடியோவைக்காண: https://x.com/VCDtweets/status/1727033727795048848

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.