அஜித் படம் ஓடுறப்போ இந்தப் படத்துக்கு யார் வருவா? கடைசில தல படம் தலைதெறிக்க ஓடுனதுதான் மிச்சம்

Published on: November 22, 2023
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு  முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் அஜித் அடுத்தடுத்து பல புதிய இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

விடாமுயற்சிக்கு பிறகு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார் அஜித். ஏற்கனவே அஜித்தின் தீவிர வெறியனாக இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: த்ரிஷாவுக்கு வரிந்து கட்டி வந்த சிரஞ்சீவி.. இளம் நடிகைகளிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோ லீக்..! நீங்கலாம் பேசலாமா?

இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான தங்கர் பச்சன் தன் சினிமா அனுபவத்தை ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்தார். அவர் முதன் முதலில் அழகி என்ற திரைப்படத்தின் மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும்.

ஆனால் முதலில் அந்தப் படத்தை வாங்க பல வினியோகஸ்தரர்கள் தயங்கினார்களாம். படத்தின் தயாரிப்பாளரும் ரிலிஸ் செய்ய முடியாமல் தவித்திருக்கிறார். அதன் பிறகு தங்கர் பச்சனின் நிலைமையை அறிந்த அழகி பட தயாரிப்பாளர் போனால் போதும் என தன் சொந்த ரிலீஸ்லேயே படத்தை ரிலீஸ் செய்தாராம்.

இதையும் படிங்க: ‘துருவ நட்சத்திரம்’ முதலில் ரஜினிக்காக சொல்லப்பட்ட கதை! ஓ இதுதானலதான் நடிக்கலயா?

சரி படம் ரிலீஸ் ஆகி விட்டது என தங்கர் பச்சன் தன் மனைவியுடன் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றாராம். ஆனால் தியேட்டரில் ஒரு ஆள் கூட இல்லையாம். ஒன்று இரண்டு பேர்தான் இருந்தார்களாம். இருந்தாலும் பார்த்த அந்த ஒரு சில பேர் படத்தை பார்த்துவிட்டு அழுது கொண்டுதான் வெளியே வந்தார்களாம்.

அந்தளவுக்கு படம் அவர்களை திருப்தி படுத்தியதாக தங்கர் பச்சன் கூறினார். அழகி ரிலீஸ் சமயத்தில் அஜித்தின் ரெட் படமும் ரிலீஸ் ஆனதாம். அதனால் அழகி படத்திற்கு கொஞ்ச தியேட்டர்தான் கிடைத்ததாம். ஆனால் 10 நாள்கள் கழிச்சு அழகி படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியது என்றும் கிட்டத்தட்ட 150 ஸ்கீரினுக்கும் மேலாக படம் ஓடிக் கொண்டிருந்தது என்றும் தங்கர் பச்சன் கூறினார்.

இதையும் படிங்க: விஜய் வரலை.. அஜித் தான் வந்தாரு… ட்ரெண்ட்டின் புகைப்படத்தில் இத்தனை ஆச்சரிய தகவல் இருக்கா..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.