லீக்கான ‘தளபதி 68’ பட கதை!. போட்றா வெடிய!.. விஜய்க்கு இது வேற லெவலா இருக்குமே!..

Published on: November 22, 2023
thalapathy 68
---Advertisement---

Thalapathy 68: லியோ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. பொதுவாக ஒரு படம் முடிந்தால் சில ஒரு மாதம் இடைவெளி விடுவார். ஆனால், இந்த முறை இடைவெளி விடாமல் வேகமாக அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜயுடன் சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் அப்பா – மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அது உண்மையா என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: பஞ்சாயத்தெல்லாம் ஓரங்கட்டியாச்சு! நமக்கு தொழில்தான் முக்கியம் – சூர்யாவுடன் மீண்டும் கூட்டணியா?

அதோடு, விஜயை வாலிப வயதில் காட்டுவதற்காக புதிய தொழில் நுட்பத்தை படக்குழு பயன்படுத்தவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் விஜய், வெங்கட்பிரபு ஆகியோர் அமெரிக்கா பறந்து சென்றனர். அங்கு விஜயை வைத்து சில சோதனைகளும் செய்யப்பட்டது.

சில நாட்களாக தாய்லாந்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்து தென் ஆப்பிரிக்கா செல்லவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், இப்படத்தின் கதை பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.

இதையும் படிங்க: அடுத்த குட்டிக்கதைக்கு ரெடியான ரஜினி!.. லால் சலாம் ஆடியோ விழா அப்டேட் இதோ!..

ஏற்கனவே மாநகரம் போல இந்த படமும் ஒரு டைம் ட்ரேவல் கதை என சொல்லப்பட்டது. இந்நிலையில், அப்பாவின் காலத்திற்கு மகன் சென்று சில விஷயங்களை மாற்றுவது போல வெங்கட்பிரபு திரைக்கதை அமைத்திருப்பதாக இப்போது செய்திகள் கசிந்துள்ளது. சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் இதை ஒட்டித்தான் கதை அமைக்கப்பட்டிருந்தது.

விஜய் இதுவரை டைம் டிராவல் கதையில் நடித்தது இல்லை. எனவே, கண்டிப்பாக இப்படம் விஜய் ரசிகர்களுக்கு புதிய அனுபத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: வச்சாங்கய்யா கன்னிவெடிய! சிம்புவும் தனுஷும் ஒரே படத்திலா? இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.