Entertainment News
அப்படி மட்டும் பாக்காத!.. லுக்குல கிக்கு ஏத்தி சொக்க வைக்கும் மாளவிகா மோகனன்..
சில பேர் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமாகிவிடுவார்கள். அதில் ஒருவர்தான் மாளவிகா மோகனன். இவரின் அப்பா மலையாள திரையுலகில் நடன இயக்குனராக இருந்தவர்.
அப்பாவுக்கு உதவி செய்வதற்காக அவருடன் படப்பிடிப்புக்கு போனபோது மாளவிகாவை பார்த்த மம்முட்டி அவரின் மகன் துல்கர் சல்மான் நடித்த ஒரு புதிய படத்தில் அவரை நடிக்க வைத்தார். இப்படித்தான் மாளவிகாவின் பிரவேசம் திரையுலகில் துவங்கியது. அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்., ஆனால், அதற்கு முன்பே வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தார். பேட்ட படத்திற்கு பின் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார்.
அதன்பின் தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்திருந்தார். மாறன் படம் தோல்விப்படமாக அமையவே அவருக்கு தொடர் வாய்ப்புகள் வரவில்லை. இப்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருபக்கம், பாலிவுட்டிலும் வாய்ப்புகளை வாங்க முயற்சி செய்து வருகிறார்.
அதற்காக, புதுப்புது உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ஃபாலோயர்ஸ்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் அழகை காட்டும் மாளவிகா திடீரென புடவை கட்டி தலையில் பூவெல்லாம் வைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.