Connect with us
devika

Cinema News

சிவாஜியுடன் காதலா?!.. சந்தேகப்பட்ட தாய்… தேவிகா என்ன செஞ்சாங்க தெரியுமா?…

Actress Devika: தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கள் வருவது சகஜமே. நடிகர் நடிகைகளை இணைத்து பேசுவது இந்த காலத்தில் மட்டுமல்லாமல் அந்த காலத்திலும் இருந்துள்ளது. அப்படி ஒரு காலத்தில் கிசுகிசுக்கப்பட்ட முன்னணி நடிகர்கள்தான் சிவாஜி கணேசன் மற்றும் தேவிகா.

சிவாஜி பத்மினி என மக்கள் கொண்டாடி கொண்டிருந்த காலம் போய் சிவாஜி மற்றும் தேவிகா என கொண்டாடும் விதமாக இவர்களின் ஜோடிப்பொருத்தம் அமைந்திருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமைந்தன.

இதையும் வாசிங்க:சினிமாவில் ரீல் ஹீரோ நிஜத்திலும் ஹீரோ தானாம்… காதலுக்காக ராமராஜன் வாங்கிய பலே பஞ்ச்… மொத்தமாக உருகிய நளினி..

இருவரின் நடிப்பையும் பார்த்த ரசிகர்களும் சரி திரையுலகினரும் சரி இவர்களின் ஜோடிபொருத்தம் அம்சமாக இருப்பதாக எண்ணினர். தேவிகா பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இவர் அறிமுகமான திரைப்படம்தான் நானும் ஒரு தொழிலாளி.

பின் பல திரைப்படங்களில் நடித்த தேவிகா சிவாஜியுடன் இணைந்து பாவ மன்னிப்பு, பந்தபாசம், அன்னை இல்லம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் இவர்களின் அன்யோன்யம் அதிக அளவில் இருந்ததால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.

இதையும் வாசிங்க:சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனர்..! மரியாதை கொடுக்காமல் சூர்யா செய்த செயல்.. என்னங்க இதெல்லாம்?!

ஒரு காலத்தில் இந்த செய்தி தேவிகாவின் தாயின் காதுக்கும் சென்றுள்ளது. தேவிகா சினிமாவிற்கு கிளம்பும் போதெல்லாம் அவரது தாய் உனக்கு சிவாஜிக்கும் இடையே காதல் உள்ளதா என கேட்பாராம். ஆனால் இல்லை என்ற பதிலே தேவிகாவிடமிருந்து வருமாம். ஒரு காலத்தில் தேவிகாவின் தாய் ‘என்ன சிவாஜியை கல்யாணம் பண்ண போறியா?’ என கேட்டாராம். இதற்கு என்ன பதில் சொல்ல என தெரியாத தேவிகா வேறொரு முடிவை எடுத்துள்ளார்.

இயக்குனர் பீம்சிங்கிடம்  உதவி இயக்குனராய் பணியாற்றியவர்தான் எஸ்.எஸ். தேவதாஸ். இவர் தேவிகா நடித்த பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த நேரத்தில் இவர்களுக்கிடையே காதலும் மலர்ந்துள்ளது. பின் இருவரும் திருமணமும் செய்துள்ளனர். என்னதான் சிவாஜியுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் தேவிகா சிவாஜியை சார் என்ற வார்த்தைக்கு மறுவார்த்தை பேசுவதில்லை. மேலும் அவரை கடைசி வரை தனது குருவாகவே வைத்துள்ளார் தேவிகா. அப்படிபட்ட குருவிற்கு தன்னால் கலங்கம் வரக்கூடாது என்பதற்காக தேவிகா இந்த திருமணத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் வாசிங்க:பாக்யராஜால் பார்த்திபனை வச்சு செஞ்ச இளையராஜா… என்ன நடந்துச்சு தெரியுமா?

Continue Reading

More in Cinema News

To Top