காலக்கொடுமையே!.. கடல் பட ஹீரோயின் துளசியா இது?.. அக்கா கல்யாணத்துல இப்படி ஆளே மாறி நிக்கிறாங்களே!..

Published on: November 24, 2023
---Advertisement---

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் திருமணம் பற்றியும் அவர் அணிந்திருந்த 500 சவரன் நகை பற்றியெல்லாம் பலரும் பேசி வரும் நிலையில், அக்கா திருமணத்தில் உடல் பருமனாகி காணப்பட்ட கடல் பட நடிகையை பார்த்து ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை ராதாவா? அது என கேட்கும் அளவுக்கு எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என ஏகப்பட்ட ட்ரோல் மீம்களையும் பதிவிட்டு அந்த மூங்கில் தோட்டம் அழகியை கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீ மாமனிதன் இல்லை!.. இன்று முதல் மாமாமனிதன்!.. இயக்குனர் சீனு ராமசாமியை பங்கம் பண்ணும் புளூ சட்டை!..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த கடல் படத்தில் ஹீரோயினாக ஸ்லிம் ஃபிட் மாடலாக சின்ன பொண்ணாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை துளசி நாயர். ஆனால், அதன் பிறகு அவர் பெரிதாக எந்தவொரு படத்திலும் தலை காட்டவில்லை.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான முதல் படத்திலேயே பாடல்கள் மட்டுமே ஹிட் அடித்தன. படமே ஓடவில்லை. இந்நிலையில், சினிமாவில் இருந்து விலகி நடிகை துளசி நாயர் தற்போது தனது அக்கா திருமணத்தில் பட்டுப் புடவையில் ஏகப்பட்ட நகைகளை அள்ளி மேலே போட்டுக் கொண்டு லட்டு போல இருப்பதை பார்த்து பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

இதையும் படிங்க: லியோ படத் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண விழாவில் விஜய்.. இப்போவும் சிங்கிளாவே போறாரே?..

எப்படி இருந்த துளசி நாயர் இப்போ இப்படி பருமனாக மாறிட்டாரே என்றும் அடுத்து அவருக்கு எப்போ திருமணத்தை ராதா செய்யப் போகிறார் என்றும் தொடர்ந்து படங்களில் நடித்திருந்தால் சூப்பராகவே இருந்திருப்பாரே என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.