கண்ணாடி புடவையில் கட்டழகை காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி… லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்…

Published on: November 24, 2023
---Advertisement---

Aishwarya lekshmi: கேரளாவை சொந்த மாநிலமாக ஐஸ்வர்யா லட்சுமி மருத்துவம் படித்துவிட்டு டாக்டராகமல் சினிமாவுக்கு வந்தவர். துவக்கத்தில் மாடலிங் துறையில் நுழைந்து சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இப்படித்தான் இவரின் சினிமா பிரவேசம் துவங்கியது.

aishwarya

சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். விஷால் நடித்த ஆக்‌ஷன் மற்றும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றிப்படங்களாக அமையவில்லை. எனவே, மீண்டும் மலையாள சினிமா பக்கம் போய்விட்டார்.

aishwarya

அதன்பின் ஆர்யா நடித்த கேப்டன் படத்தில் நடிப்பதற்காக மீண்டும் சென்னை வந்தார். அப்படியே மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே ஐஸ்வர்யாவுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. விஷ்ணு விஷாலோடு இணைந்து அவர் நடித்த கட்டா குஷ்தி படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

aishwarya

அதன்பின் பொன்னியின் செல்வன் பாகம் 2-வில் நடித்தார். துல்கர் சல்மானுடன் கிங் ஆப் கோத்தா படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களையும் கவர்ந்தார்.

aishwarya

ஒருபக்கம், அழகான ஆடைகளை அணிந்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாவதுண்டு. அந்த வகையில் கண்ணாடி புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

aishwarya