Cinema History
சிவாஜி ஆண்டி ஹீரோவாக நடித்த முதல் படம்..! 17 நாளில் ஷூட்டிங்கை முடித்த பிரபல இயக்குனர்..!
Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் சிவாஜி நடிக்காமல் விட்ட கதாபாத்திரத்தினை எண்ணக்கூட முடியாது. ஏனெனில் அப்படி ஒரு லிஸ்ட்டே கிடையாது. தன்னை தேடி வரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து விடுவார். அப்படி அவர் ஆண்டி ஹீரோவாக நடித்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு மனைவி தன் தேசத்துக்கு எதிராக தவறு செய்யும் சொந்தக் கணவனையே கொல்லத்துணிவதுதான் அந்த நாள் படத்தின் கதை. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் படைகள் சென்னை மீது குண்டுவீசிய மறுநாள் 1943ம் ஆண்டு அக்டோபர் 11 இந்த கதை தொடங்கும்.
இதையும் படிங்க: விஜய் செஞ்ச வேலையில் அஜர்பைசானில் இருந்து கிளம்பிய அஜித்?!.. இது என்னடா அக்கப்போரு!..
இந்த படத்தில் கணவராக தேசத்துக்கு துரோகம் செய்யும் கேரக்டரில் சிவாஜி நடித்து இருந்தார். ஆனால் முதலில் இவருக்கு இந்த வாய்ப்பு நேரடியாக செல்லவில்லை. ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனுக்கு இந்த கதை பிடித்து போக தயாரிக்க தயாரானார். படத்தில் பாடல்களே இல்லை என்பது மேலும் விஷேசம்.
ஹீரோ பாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானவர் எஸ்.வி. சஹஸ்ரநாமம். படப்பிடிப்பு நடந்தும் கூட அவர் இந்த கதாபாத்திரத்துக்கு கூடுதல் வயதாக தெரிந்தார். பிறகு புதியவரான, கல்கத்தாவைச் சேர்ந்த நாடக நடிகர் என். விஸ்வநாதன் எனும் தமிழ்ப் பேராசிரியரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு மொத்தமாக முடிந்து விட்டது.
ஆனால் மெய்யப்ப செட்டியாருக்கு அதில் திருப்தி இல்லை. பராசக்தி படத்தில் நடித்த சிவாஜியை வைத்து மீண்டும் இயக்க கூறுகிறார். ஆனால் இது படத்தின் இயக்குனர் பாலசந்தருக்கு சம்மதம் இல்லை. உடனே கடுப்பான மெய்யப்ப செட்டியார் தன் நிர்வாகி வாசுதேவ் மேனனை அழைத்து, பாலச்சந்தரின் சம்பள பாக்கியை செட்டில் செய்ய சொல்கிறார். அதுவரை எடுக்கப்பட்ட மொத்த ரீல்களையும் தீ வைத்து கொளுத்த உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரஜினிகிட்ட விஜய் கத்துக்கணும்… மாறுவாரா தளபதி
இதைக் கேட்ட பாலசந்தர் ஷாக்காகி விட்டார். கடைசியில் அவர் விருப்பப்படியே சிவாஜி கணேசனை வைத்து படப்பிடிப்பை தொடரலாம் என ஒத்துக்கொண்டார். சிவாஜிக்கு கதை பிடித்தாலும் சம்பளம் அதிகமாக கேட்கிறார். ஆனால் மெய்யப்பனுக்கோ நிறைய செலவாகி விட்டது என தொடர்ந்து இழுப்பறி நீடித்தது. கடைசியில் மெய்யப்ப செட்டியார் ஆசைக்கு ஏற்ப அவர் கொடுத்த சம்பளத்தில் நடித்து கொடுத்தார்.
சிவாஜி அப்போது வளர்ந்து வந்த காலம் என்பதால் இயக்குனர் அதிக நாட்கள் கால்ஷூட் எடுத்து கொள்வாரோ என கவலையாக இருந்தாராம். ஆனால் இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் சிவாஜிக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில், பாலச்சந்தர் 17 நாட்களில் படப்பிடிப்பை முடித்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.