அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சீரியல்கள்! ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

Published on: November 25, 2023
bakkiya
---Advertisement---

Vijay TV Serials: மக்களின் அபிமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது சீரியல்கள்தான். தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே பல சீரியல்கள் மாறியிருக்கிறது.  நடனம், திரைப்படம், பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சி இவைகள் மத்தியில் குடும்ப பெண்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சியாக இருப்பது சீரியல்கள்தான்.

அந்த வகையில் சன் டிவியும் விஜய் டிவியும் குடும்ப பெண்களின் ஆதரவை திரட்டும் வகையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஏதாவது  ஒரு புதுமையை புகுத்தி தக்க வைத்துக் கொள்ள முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இரண்டு நிறுவனமும் பல சீரியல்களை ஒளிபரப்பு செய்கிறது.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் யார் கூப்பிட்டும் நடிக்க வராத ரகுவரன்!. அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே!…

அதில் ஒரு சில சீரியல்கள்தான்  மக்களின் பேராதரவை பெற்று டிஆர்பியிலும் முதலிடத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சீரியல்கள் விரைவில் முடிவடைய போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றது.

மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே பார்ட் 2 சீரியல் விரைவில் முடிவடைய போவதாக செய்திகள் வெளியாகின்றது. இதன் க்ளைமாக்ஸ் காட்சியைத்தான் இப்போது ஷூட்  செய்து கொண்டு இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: உண்மையிலேயே சகலகலாவல்லவன்தான்! கமல் வாங்கிய தேசிய விருதுகள் எத்தனை தெரியுமா?

இருந்தாலும் ஜனவரி மாதம் வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. அதுவரை உள்ள ஃபுட்டேஜ்கள் எல்லாம் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. அதே போல் இதனை அடுத்து மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கண்ணே கலைமானே சீரியலும் முடிவடைய போவதாகவும் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு சீரியல்களின் டிஆர்பியும் குறைவாக இருப்பதால் சீக்கிரம் இந்த சீரியல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என நினைக்கிறார்களாம். அதற்கு ஏற்றாற்போல் பல புதிய சீரியல்களின் ப்ரோமோவும் அவ்வப்போது ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: உண்மையிலேயே சகலகலாவல்லவன்தான்! கமல் வாங்கிய தேசிய விருதுகள் எத்தனை தெரியுமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.