விசித்ராவை விட எனக்கு நடந்தது மோசம்.. காதல் பட நடிகையின் பகீர் தகவல்.. அடப்பாவிங்களா..!

Published on: November 27, 2023
---Advertisement---

Kadhal Movie: பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் தன்னை தாக்கிய பூகம்பம் டாஸ்கில் விசித்ரா தனக்கு படப்பிடிப்பில் நடந்த பாலியல் சீண்டலை சொல்லினார். இது பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வார இறுதியில் கூட கமல் வந்து விசித்ராவையும், அவர் கணவரையும் பாராட்டி இருந்தார்.

விசித்ரா தனக்கு ஒரு பெரிய படத்தில் நடித்த போது அந்த படத்தில் நடித்த நடிகர் என்னை ரூமுக்கு அழைத்தார். அப்போது என் கணவர் தான் அங்கு ஜெனரல் மேனேஜராக இருந்தார். எனக்கு தினமும் வெவ்வேறு ரூமை ஒதுக்கி கொடுத்தார். தொடர்ந்து படப்பிடிப்பில் சண்டை மாஸ்டர் என்னை அறைந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தேன்.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை தொடர்ந்து ஆதிக்கை டீலில் விட்ட அஜித்..! அடுத்த இயக்குனர் இவர்தானா?

அவர்களும் எனக்கு சாதகமாக பதில் சொல்லவில்லை. இதனால் சினிமாவில் இருந்தே விலகியதாக விசித்ரா சொல்லி இருந்தார். இந்த பிரச்னைக்கு பின்னர் கோலிவுட்டில் அதிர்வலைகளை கிளப்பியது. நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பிரச்னைகளை சொல்லி வருகின்றனர். அதில் காதல் படத்தில் தோழியாக நடித்த சரண்யா தனக்கு படப்பிடிப்பில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து பேசி அதிர வைத்துள்ளார்.

அவர் பேட்டியில் இருந்து, விசித்ரா சொன்னது போல திரைத்துறையில் நிறைய நடந்து வருகிறது. நிறைய நடிகைகள் கஷ்டத்தினை அனுபவிக்கின்றனர். எனக்கும் கூட நிறைய மோசமான அனுபவங்கள் நடந்து இருக்கிறது. நாம் பெரிய நடிகையாக இருக்கும் போது எது சொன்னாலும் நடக்கும். சின்ன நடிகையாக இருக்கும் போது நாம் எவ்வளவு பிரச்னையை சந்தித்தாலும் அதை வெளியில் சொன்னால் பெரிதாக எடுப்படாது.

இதையும் படிங்க: வீட்டுக்கு போக ஆசைப்படும் ரவி.. முரண்டு பிடிக்கும் ஸ்ருதி.. அசிட் அடிக்க காத்திருக்கும் பிஜூ..!

மீடியாவை தெரிந்து தானே உள்ளே வந்தீங்க. இப்படிதானே இருக்கும் என இளக்காரமாக பேசுவார்கள். சினிமாத்துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலும் இதே மாதிரி பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. எனக்கு நிறைய படங்களில் இந்த பிரச்னை இருக்கிறது. பேராண்மை படத்தில் நான் நடித்த போது அத்தனை பாதுகாப்பாக ஃபீல் செய்தேன் எனவும் கூறி இருக்கிறார். 

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.