Cinema History
உன்கூட இருக்க ஒருத்தனையும் நம்பாதே!. கழுத்த அறுத்துருவானுங்க!. எம்ஜிஆரை எச்சரித்த எம்.ஆர்.ராதா
பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாக எம்ஆர்.ராதா நடித்திருந்தார். நிஜ வாழ்க்கையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும், எம்ஆர்.ராதாவுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருந்தது என பார்ப்போமா…
தந்தை பெரியார் இறந்ததும் அதைக் கேள்விப்பட்டு அடுத்த நொடியே எம்.ஆர் ராதா ராஜாஜி மண்டபத்திற்கு வந்தார். அங்கு பெரியாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், போச்சி போச்சி இனிமேல் தமிழ் நாட்டுக்கு தலைவனே இல்லை என்று பெரியாரின் உடல் மீது விழுந்து புரண்டு கதறினார். அவரை யாராலும் ஆறுதல்படுத்த முடியவில்லை.
அதே சமயம் எம்ஜிஆரும் அங்கு வந்தார். பெரியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ராதாவை பார்த்து வணக்கம் சொன்னதும், பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்தார். உன் கூட இருக்கிற எவரையும் நம்பாதே. சமயம் பார்த்து கழுத்தை அறுத்துடுவாங்கன்னு தனக்கே உரிய ஸ்டைலில் சொன்னார் எம்.ஆர்.ராதா. அதன்பின் எம்.ஜி.ஆருன் பல படங்களில் எம்.ஆர்.ராதா நடித்தார். மேலும், ஒரு பிரச்சனையில் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு சிறைக்கும் போனார்.
அதன்பிறகு எம்ஜிஆர், ராதாவின் சந்திப்பு மனோரமாவின் மகன் பூபதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது. மனோரமாவின் மகன் பூபதிக்கும், இதயம் பேசுகிறது பத்திரிகை ஆசிரியர் மணியனின் மைத்துனிக்கும் இந்தத் திருமணம் நடந்தது. மணியன் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர். இந்த வரவேற்பு ஏவிஎம். ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.
கே.ஜே.யேசுதாஸின் இன்னிசைக் கச்சேரி நடந்தது. அங்கு முன்வரிசையில் வந்து அமர்ந்தார் எம்ஜிஆர். அப்போது திடீரென சலசலப்பு ஏற்பட்டது. எம்ஆர். ராதா வேகமாக எம்ஜிஆரை நோக்கி நடந்து வந்தார். ராதா சிரித்தார். எம்ஜிஆரும் பதிலுக்கு கரங்களைக் குவித்து கும்பிட்டார். அதைப் பார்த்ததும் மக்கள் கூட்டம் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தது.
எம்ஜிஆருக்கு இடப்புறத்தில் சற்று தள்ளி அமர்ந்தார் எம்.ஆர். ராதா. திடீரென பரபரப்பு ஏற்பட்டது. பார்த்தால் ரிவால்வர் பெல்ட்டுடன் ஒரு இன்ஸ்பெக்டர் ஓடி வந்து எம்ஜிஆரின் அருகில் நின்றார். அதைக் கவனித்ததும் எம்ஜிஆர் இனிமேலும் இங்கு இருப்பது சரியல்ல என கிளம்பினார்.