காசு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?… ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த எஸ்.வி.சேகர்…

Published on: November 30, 2023
s.v.shekher
---Advertisement---

Actor s.v.shekher: எஸ்.வி.சேகர் தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர். இவர் நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார் என்றே கூறலாம்.

காமெடி கதாபாத்திரமானாலும் சரி, குடும்ப பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி தனது நடிப்பினை மிகச்சிறப்பாக காட்டியவர். இவரின் திரைப்படங்கள் பொதுவாக கலகலப்பாக இருக்கும். இவர் மேலும் குடும்பம் ஒரு கதம்பம், மிஸ்டர் பாரத், லக்‌ஷ்மி வந்தாச்சு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:விசித்ரா கையால அவார்ட் வாங்குறப்போ வெட்கமா இருந்துச்சு… பிரபல சீரியல் நடிகை சொன்ன ஷாக் தகவல்…

பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில் இவரின் காமெடியான நடிப்பு மக்களை ஈர்த்தது. மேலும் இவர் திருப்பது எழுமலை வெங்கடேசா, சிஹாமணி ரமாமணி, கந்தா கடம்பா கதிர்வேலா திரைப்படத்தின் மூலம் தனது கலகலப்பான கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார்.

சினிமாவை தாண்டி இவர் சில காலம் அரசியலிலும் ஈடுபட்டார். ஆனால் இவரால் அரசியலில் அந்த அளவு நிலைத்திருக்க முடியவில்லை. இவர் மேலும் சின்னத்திரையில் பல மேடை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் சென்றுள்ளார். இவர் நேற்று நடைபெற்ற எமகாதகன் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் அமீரைபற்றியும் தற்பொது அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகளை பற்றியும் பேசியிருந்தார்.

இதையும் வாசிங்க:உங்களுக்காக நடிப்பதையே நிறுத்திடுறேன்!. மைக் மோகனை உருகி காதலித்த நடிகை.. அட நிஜமாதாங்க!..

அவ்வாறு பேசுகையில், தனக்கு சினிமாவில் மிகவும் பிடித்த இயக்குனரென்றால் அது அமீர் மட்டுமே. சினிமாவுக்காக பலர் தங்களது பெயரை கூட மாற்றியுள்ளனர். ஆனால் ஆரம்பத்திலிருந்து தனது இயல்பு மாறாமல் இருப்பது அமீர் மட்டுமே என அமீரை புகழ்ந்திருந்தார். மேலும் ஞானவேல்ராஜா அமீரின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு  மிகவும் தவறு எனவும், காசு பணம் வைத்திருந்தால் ஞானவேல்ராஜா மாதிரியான ஆட்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஞானவேல் ராஜா இப்படி பேசியதற்கு கண்டிப்பாக வருத்தப்பட வேண்டும் எனவும் மேலும் எந்த யூடியூப் சேனலில் அவர் பேட்டி கொடுத்திருந்தாரோ அந்த சேனலை தொடர்புகொண்டு அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் எனவும் கடும் குற்றசாட்டினை வைத்திருந்தார். எஸ்.வி.சேகரின் இப்பேச்சு தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிங்க:அருண்குமார் அட்லி ஆன கதை எப்படி தெரியுமா?!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!…

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.