Connect with us
siva

Cinema News

வருத்தம் தெரிவிச்சா விட்ருவனா?!… அடங்காத கோபத்தில் அமீர் அடுத்து செய்யப்போவது இதுதானாம்!…

Director Ameer: தினந்தினம் ஏதாவது ஒரு விதத்தில் அமீர் – ஞானவேல் ராஜா பிரச்சினை குறித்து பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பருத்திவீரன் படம் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரச்சினை இப்போதுதான் பூதாகரமாக மாறியிருக்கிறது.

தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் சீக்கிரம் படத்தை முடித்துவிடுகிறேன் என்று சொல்லி நாள் கடத்தியதாகவும் அமீர் மீது தொடர்ந்து பல புகார்களை ஞானவேல் ராஜா அடுக்கிக் கொண்டே இருந்தார். ஏற்கனவே ஞானவேல் ராஜா மீது புகார் கொடுத்திருக்கும் அமீர் அது சம்பந்தமாக கிட்டத்தட்ட 17 வருடங்களாக நீதிமன்றத்தை அணுகிக் கொண்டுதான் இருக்கிறார்.

இதையும் படிங்க: ரேஸில் ஜெயிப்பாரா நயன்? நாளை இத்தனை படங்களுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் – களைகட்டும் திரையரங்கம்

இதற்கிடையில் அமீரை திருடன் என்று சொல்வதும் அருவருக்கத்தக்க உடல் மொழியால் வசை பாடுவதும் என அமீரை சீண்டி கொண்டே இருந்தார் ஞானவேல் ராஜா. அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன், சினேகன் போன்றோர் பலர் குரல் கொடுத்தனர்.

கரு.பழனியப்பன் கூட தனது அறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் சிவக்குமாரை மிகவும் தாக்கியிருக்கிறது. அதன் காரணமாகத்தான் சிவக்குமார் சொன்னதின் பேரில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனாலும்,  கோபம் குறையாத அமீர் ஞானவேல் ராஜாமீது மான நஷ்ட ஈடு  வழக்கு தொடர முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: சோவிற்கு வந்த மிரட்டல்… எல்லாத்துக்கும் காரணம் ஜெய்ஷங்கர்தான்!.. நடந்தது இதுதான்..

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top