Connect with us
Karnan Sivaji

Cinema History

50 வருடங்களில் முறியடிக்கப்படாத சாதனை… இதை அப்போதே செய்து காட்டிய நடிகர் திலகம்…! என்ன படங்கள்னு தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் படங்கள் என்றாலே நடிப்புக்கு இலக்கணமாக அமைந்து இருக்கும். நடிப்பில் நவரசத்தையும் காட்டி விடுவார். அதனால் தான் அவருக்கு நடிகர் திலகம் என்ற பட்டமே வந்துள்ளது. தமிழ்த்திரை உலகில் அவரது சாதனை ஒன்று இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அது என்ன என்று பார்க்கலாமா…

அன்றைய காலகட்டத்தில் நடிகர் திலகம் ரொம்பவே பிசியாக இருந்தார். அப்போது இயக்குனர் ஏ.பி.நாகராஜன் புதுமையான ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தார். இது வரை யாரும் செய்யாதது. ஆனால் நடிகர் திலகம் சிவாஜியின் கால்ஷீட் கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார் சிவாஜி. அதற்கு இயக்குனரே யோசனையும் சொல்கிறார்.

தான் எடுக்க நினைக்கும் படம் இரவு நேரங்களில் நடப்பதாக இருக்கும் கதை அமைப்பைக் கொண்ட படம். அதனால் இரவு நேர கால்ஷீட் கொடுத்தாலே போதும். சில நாள்கள் மட்டும் பகல் கால்ஷீட் கொடுத்தால் படத்தை எடுத்துவிடலாம் என்கிறார். அதன்படி படமும் எடுத்து முடிக்கிறார்கள்.

Navarathiri

Navarathiri

தமிழ்சினிமாவில் முதன்முறையாக ஒரு நடிகர் கதாநாயகனாக நடித்து 100 படங்களை நிறைவு செய்கிறார். ஆம். நடிகர் திலகத்துக்கு நவராத்திரி 100வது படம். அதுவும் முற்றிலும் மாறுபட்ட 9 வேடங்களில் நடித்து அசத்தினார் சிவாஜி. அதை மக்களும் ஏற்றுக்கொண்டு படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தனர்.

சென்னை, மதுரை, திருச்சி நகரங்களில் 100 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. 1964ல் வெளியான 7 படங்களில் 5 படங்கள் 100 நாள்களைக் கடந்து ஓடி தமிழ்த்திரை உலக வரலாற்றில் சாதனை படைத்தது. அவரே 1972ல் தனது சாதனையை முறியடித்தார். அந்த வருடத்தில் இவர் நடித்த 6 படங்கள் 100 நாள்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றன.

1964ல் சென்னையில் கர்ணன், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி என்ற 5 படங்கள் 15 திரையரங்குகளில் வெளியானது. இந்த 15 திரையரங்குகளிலும் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தன. இது இந்த 50 வருடங்களில் யாராலும் முறியடிக்கப்படாத சாதனை. அதே ஆண்டில் சென்னையில் 7 சிவாஜி படங்கள் 26 திரையரங்குகளில் வெளியானது. அவற்றில் 25 திரையரங்குகளில் 50 நாள்களையும் கடந்து படங்கள் ஓடின. இந்த சாதனையையும் இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top