Actor vijay: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர்தான் விஜய். அப்பாவே பெரிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் நுழைவது என்பது அவருக்கு சுலபமாக இருந்தது. நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் வெளியான வரும் 1992.
அதன்பின் ரசிகன், மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்ளே, தேவா, செந்தூரபாண்டி என சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, விஜயை வைத்து படம் எடுக்கும்படி மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டார் எஸ்.ஏ.சி.
இதையும் படிங்க: சிவாஜியை அறிமுகப்படுத்துன ஏ.வி.எம் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. ஐயோ பாவம்..
அப்படித்தான் விஜய்க்கு ‘பூவே உனக்காக’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றி விஜய்க்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. எனவே, தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். பெரிய வெற்றி இல்லை என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த லாபம் கிடைத்தது.
இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் மாறியிருக்கிறார். இவரின் படங்களில் வெளிநாட்டில் கூட நல்ல வசூலை பெற்று வருகிறது. இவர் நடிக்கும் படம் என்றாலே அப்படம் தொடர்பான செய்திகளும் எல்லோராலும் கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: திடீரென அழைத்த விஜய்… திக்குமுக்காடி போன அட்லீ!.. அவரே அத எதிர்பார்க்கலயாம்!..
ஆனால், இதே விஜய்க்கு 1999ம் வருடம் பெரிய சோதனை ஆண்டாக அமைந்தது. அந்த வருடத்தின் துவக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளிவந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், அதே உற்சாகத்தில் அடுத்து அவர் நடித்த ‘என்றென்றும் காதல்’ படம் படுதோல்வி அடைந்தது. அடுத்து அவரின் அப்பா இயக்கத்தில் நடித்த ‘நெஞ்சினிலே’ படமும் ஊத்திக்கொண்டது.
என்னடா இரண்டு படங்கள் தோல்வி அடைந்துவிட்டதே என்கிற விரக்தியில் விஜய் அடுத்து நடித்த படம் ‘மின்சார கண்ணா’. படையப்பா எனும் மெகா ஹிட்டுக்கு பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படமும் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இப்படி 1999ம் வருடம் தொடர்ந்து 3 தோல்விப்படங்களை கொடுத்தார் விஜய்.
சரி 1999 இப்படி ஆகிடுச்சி. அடுத்து கண்டிப்பா ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்த விஜய் ‘காதலுக்கு மரியாதை’ எனும் சூப்பர் ஹிட் கொடுத்த பாசில் இயக்கத்தில் கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்தார். 2000ம் வருடம் ஜனவரியில் பொங்கலுக்கு வெளியான இந்த படமும் ஓடவில்லை. இப்படி தொடர்ந்து 4 படங்கள் தோல்வி. அதன்பின் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த குஷி படம்தான் விஜயை காப்பாற்றி சினிமாவில் அவரை நீடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல்-ரஜினி போல அஜித்-விஜய் ஏன் செய்வது இல்லை?.. செஞ்சா அவங்க பொழப்பு என்னாவது!..
