
Cinema News
அஜித் நடிக்க வேண்டிய மாஸ் கதை!.. சியான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்.. அட அந்த படமா?…
Published on
By
பொதுவாக திரையுலகை பொறுத்தவரை இளம் நடிகர்கள் சினிமாவில் நுழையும்போது காதல் கதைகளில் மட்டுமே நடிப்பார்கள். பல வருடங்கள் கதாநாயகியுடன் டூயட் பாடும் வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமாவார்கள். அதன்பின் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் கதைகளில் நடிக்க துவங்குவார்கள்.
ஏனெனில், ஆக்ஷன் கதை மூலம்தான் ஒரு நடிகர் சூப்பர்ஸ்டாராகவும், மாஸ் ஹீரோவாகவும் மாறமுடியும் என்பதுதான் சினிமாவின் கணக்கு. அதனால்தான் எம்.ஜி.ஆரே ஆக்ஷன படங்களில் மட்டுமே நடித்தார். அவருக்கு பின் வந்த ரஜினியும் அதைத்தான் செய்தார். ஆக்ஷன் படங்களில் நடித்துதான் ரஜினி சூப்பர்ஸ்டாராக மாறினார். இப்போதும் அவர் ஒரு மாஸ், ஆக்ஷன் ஹீரோவாகத்தான் இருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு அடுத்து அது அஜித்துக்குதான் கிடைச்சது!.. தளபதிக்கு கூட இல்லையாம்!..
இதே பாணியைத்தான் விஜயும், அஜித்தும் பின்பற்றினார்கள். துவக்கத்தில் காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களில் நடிக்க துவங்கி மாஸ் ஹீரோக்களாக மாறினர். விக்ரம், சூர்யா, சிம்பு, விஷால் உள்ளிட்ட நடிகர்களும் ஆக்ஷன் படங்கள் மூலம்தான் தங்களை சினிமாவில் தக்க வைத்துக்கொண்டனர்.
துவக்கத்தில் காதல் கதைகளில் மட்டுமே நடித்துவந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி சிட்டிசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பில்லா திரைப்படம் அவருக்கு கை கொடுத்தது. மங்காத்தா திரைப்படமோ அவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது. அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குனர் சரணுக்கு உண்டு. அமர்க்களம் படத்தில்தான் அஜித்தை அவர் மொத்தமாக மாற்றினார்.
இதையும் படிங்க: அஜித்துக்கு நடிப்பில் டெடிகேஷனே இல்லை.. சூர்யா ஃபீல்ட் அவுட் நடிகர்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர்..!
மேலும், அஜித்தை வைத்து அட்டகாசம், அசல் ஆகிய ஆக்ஷன் படங்களை இயக்கினார். இதே இயக்குனருடன் அஜித் நடிக்க ‘ஏறுமுகம்’ என்கிற படம் உருவானது. போஸ்டருடன் அறிவிப்பும் வெளியானது. ஆனால், படத்தின் கதையை எழுதி முடிக்க சரண் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டதால் அஜித் அப்படத்திலிருந்து விலகினார்.
அதன்பின் அதே கதையை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க விக்ரமை வைத்து ‘ஜெமினி’ படமாக இயக்கினார் சரண். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தன் ரசிகர்களுக்காக பலரிடமும் மன்னிப்பு கேட்ட தல அஜித்!. தளபதி இவர்கிட்ட கத்துக்கணும்..
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...