Cinema History
இது மருத்துவமனையில் எடுத்த போட்டோவே இல்ல!.. பகீர் கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்…
உடல்நலம் குன்றிப்போய் இருக்கும் கேப்டன் விஜயகாந்தைப் பற்றி தினமும் சோஷியல் மீடியாக்கள் பல்வேறு வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரபல யூடியூப் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
ரசிகர்களையும், அவரது தொண்டர்களையும் சாந்தப்படுத்துவதற்கு பிரேமலதா வெளியிட்ட படம் தான் அது. இப்போ எடுத்த படமா இருக்காது. ஏன்னா நேற்று வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையின்படி அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்ல செயற்கை சுவாசம் தான் கொடுப்பார்கள்.
அதுலயும் நுரையீரல் ஏத்துக்கலன்னா தொண்டையில் ஓட்டைப் போட்டு குழாய் மூலமாக சுவாசம் கொடுப்பார்கள். அது உடனடியா வந்து சரியாகாது. ரெண்டு மூணு நாள் கூட ஆகலாம். ஆனா இப்ப எடுக்கற போட்டோவை மருத்துவமனை அனுமதிக்காது. ஒரு மாதத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட போட்டோவா இருக்கும்னு நினைக்கிறேன்.
ஏற்கனவே அவருக்கு சுயநினைவு இழந்துட்டாரு. சுவாசப்பையில் கோளாறு இருக்கிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். ஆனா உடல் நலம் நல்லா தான் இருக்குதுன்னு சொல்லிருக்காரு. அப்படிப்பட்ட சூழலில் மருத்துவமனை போட்டோ எடுக்க அனுமதிக்காது.
ஜெயலலிதாவுக்கும், கலைஞருக்கும் எந்த போட்டோவும் மருத்துவமனையில் இருந்து எடுக்க அனுமதிக்க வில்லை. அதே போல தான் கேப்டனுக்கும். இது உண்மையான போட்டோ அல்ல. ஆர்.கே.செல்வமணி மருத்துவமனைக்கு விஜயகாந்தைப் பார்க்கப் போனாராம். ஆனால் அனுமதிக்கவில்லையாம். யாரையுமே பார்க்க அனுமதிக்காத நிலையில் போட்டோ எடுக்க மட்டும் மருத்துவமனை எப்படி அனுமதித்தது?
ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது சசிகலாவைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் தான் கேப்டனும் இருக்கிறார். ஜெயலலிதாவைப் பார்க்காம நிறைய பேரு எப்படி எப்படி எல்லாம் ரிப்போர்ட் கொடுத்தாங்களோ அதே மாதிரி தான் கேப்டனுக்கும்.
அவரைப் பார்க்காமலே உடல் நலத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க. மருத்துவமனைக்கும், பிரேமலதாவுக்கும் தான் கேப்டன் எப்படி இருக்காருங்கறது தெரியும். எம்ஜிஆரை மாதிரி அதிகமான அரசியலைப் பேசினவரு கேப்டன் தான். அவர் ஒரு கருப்பு எம்ஜிஆர்’ என பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்தை பார்க்க போன இயக்குனர் பாடிய பாட்டு!.. ஞாபகம் வந்து கண்கலங்கிய கேப்டன்..