Cinema History
பல உதவி இயக்குனர்களுக்கு அஜித் கொடுத்த வாய்ப்பு!.. தட்டி தூக்கி ஸ்கோர் செய்த எஸ்.ஜே.சூர்யா…
Ajith kumar: 1960ல் இருந்து 80வரை குறிப்பிட்ட சில இயக்குனர்கள் இயக்கும் படங்களில் மட்டுமே அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த நடிகர்கள் நடிப்பார்கள். புதுமுக இயக்குனரை நம்பி நடிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட எல்லோரும் அப்படித்தான். அதையேதான் ரஜினியும், கமலும் பின்பற்றினார்கள்.
ரஜினி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். கமலும் அப்படித்தான். அவரின் நட்பு வட்டாரங்களில் இருக்கும் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பார். ஆனால், 90களில் இது மெல்ல மெல்ல மாறியது. நிறைய புதிய மற்றும் இளம் இயக்குனர்கள் வந்தார்கள்.
இதையும் படிங்க: அஜித் 50 தடவ மொட்டை போட்டும் ஃபிளாப் ஆன படம்!.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா!..
ஜென்டில்மேன் படம் இயக்கிய போது ஷங்கரும் புதுமுக இயக்குனர்தான். ஆசை படம் எடுக்கும்போது எஸ்.ஜே.சூர்யா, தீனா படம் எடுக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் என பலரும் புதுமுக இளம் இயக்குனர்களாக இருந்தனர். இப்போது அவர்கள் இருக்கும் உயரம் என்பது வேறு.
சினிமாவில் உதவி இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது நடிகர் அஜித் என்று சொல்லலாம். வஸந்த் இயக்கத்தில் ஆசை படத்தில் நடித்தபோது அந்த படத்தில் சுறுசிறுப்பாக வேலை செய்த எஸ்.ஜே.சூர்யாவிடம் ‘நல்ல கதை இருந்தால் சொல். உன் இயக்கத்தில் நான் நடிக்கிறேன்’ என சொன்னார். அப்படித்தான் வாலி படம் உருவானது.
இதையும் படிங்க: அவர பார்த்து மிரண்டுட்டேன்.. அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்!. அஜித்தே பாராட்டிய நடிகர்…
சுந்தர்.சி இயக்கத்தில் உன்னைத்தேடி படத்தில் நடித்தபோது அந்த படத்தில் வேலை செய்த சிங்கம் புலிக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்படித்தான் ‘ரெட்’ படம் உருவானது. அதேபோல், வாலி படத்தில் வேலை செய்த முருகதாஸுக்கு ‘தீனா’ பட வாய்ப்பை கொடுத்து மேலே தூக்கிவிட்டார்.
அதேபோல் பாலச்சந்திரிடம் உதவியாளராக இருந்த சரண் இயக்கத்தில் காதல் மன்னன் படத்தில் நடித்தார். அதன் சரண் பல திரைப்படங்களை இயக்கினார். இப்படி பல உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மேலே தூக்கிவிட்டிருக்கிறார் அஜித்.
இதையும் படிங்க: அஜித் நடிக்க வேண்டிய மாஸ் கதை!.. சியான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்.. அட அந்த படமா?…