Cinema History
கிண்டலடித்த சினிமா உலகம்!.. அவமானத்தை தாண்டி ‘அப்பு’வாக சாதித்து காட்டிய கமல்..
Apoorva sagodharargal : ஐந்து வயது முதல் சினிமாவில் நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா துவங்கி விக்ரம் வரை கிட்டத்தட்ட 250 படங்களில் நடித்த நடிகர் இவர். நடிப்பு மட்டுமில்லாமல் தான் நடிக்கும் திரைப்படங்களில் புதுப்புது பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்கும் பழக்கம் இவருக்கு உண்டு.
வசனத்தை மட்டுமே நம்பி சினிமா உருவான காலத்தில் ‘பேசும் படம்’ என்கிற திரைப்படத்தில் ஒரு வசனம் கூட பேசாமல் நடித்தார். 100வது படமான ராஜபார்வையில் கண்பார்வை அற்றவராக கலக்கி இருந்தார். இளம் வயதிலேயே ஒரு முதியவராக நாயகன் படத்தில் நடித்து ஆச்சர்யம் கொடுத்தார்.
இதையும் படிங்க: கமல், விஜய், சூர்யா படங்களை காலி செய்த விஜயகாந்த்!.. கலெக்ஷன் கிங்காக இருந்த கேப்டன்…
மைக்கேல் மதன காமராஜன், குணா, ஆளவந்தான், தசாவதாரம் என பல கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு உன்னத கலைஞர் கமல்ஹாசன். பொதுவாக சினிமாவில் கேலி, கிண்டல், பொறாமை ஆகியவை மிகவும் அதிகம். ஒருவர் எடுக்கும் புதிய முயற்சி சகட்டுமேனிக்கு நக்கலடிப்பார்கள். அதையும் தாண்டி அதை செய்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். கமல் இதை பலமுறை சந்தித்திருக்கிறார்.
அபூர்வ சகோதரர்கள் கதையை உருவாக்கி அப்படத்தில் அப்பு எனும் வேடத்தில் குள்ளமான ஒருவராக கமல் நடிக்க முடிவெடுத்தார். அமிதாப்பச்சன் போன்ற உயரமான நடிகர் குள்ளமாக நடித்தால் அது ஆச்சர்யம்.. கமல் ஏற்கனவே குள்ளம்தானே என திரையுலகில் பலரும் அவரை கிண்டலடித்தனர்.
இதையும் படிங்க: காக்க வச்சி அல்வா கொடுத்த கமல்!.. அந்த ஹீரோ பக்கம் போன ஹெச்.வினோத்.. இதெல்லாம் நியாயமா?..
அதோடு, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திய நிலையில் கமலுக்கு திருப்தி இல்லை. எனவே, கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்திடம் உதவி கேட்டார். அவர்தான், அப்பு கமலுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பவது போல் கதையை மாற்று. அப்புதான் இந்த கதையின் ஹீரோ என சொன்னார். கமலும் அதை ஏற்று திரைக்கதையை மாற்றி எழுதினார்.
அப்படி உருவான அப்பு கதாபாத்திரம் இப்போதுவரை இயக்குனர்களால் சிலாகிப்பட்டு வருகிறார். தொழில்நுட்பம் வளராத அந்த காலத்தில் கமல் எப்படி அப்படி குள்ளமாக நடித்தார் என்பது இப்போதுவரை பலருக்கும் தெரியாது. இதில், இயக்குனர்களும் அடக்கம். கேலி, கிண்டல், அவமானங்களை தாண்டி கமல் ஏற்ற அந்த அப்பு கதாபாத்திரத்தை ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.
இதையும் படிங்க: கமல்-ரஜினி போல அஜித்-விஜய் ஏன் செய்வது இல்லை?.. செஞ்சா அவங்க பொழப்பு என்னாவது!..