25வது படத்தில் சறுக்கிய நடிகர்களும், சாதித்த நடிகர்களும்!.. அட இவரும் லிஸ்ட்ல இருக்காரா!…

Published on: December 5, 2023
tamil actors
---Advertisement---

தனது நடிப்பினாலும் மேலும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தினாலும் மக்களை கவர்பவர்கள் ஒவ்வொரு படத்தின் கதாநாயகர்கள்தான். அப்படிப்பட்ட கதாநாயகர்களுக்கு தங்களது வாழ்வில் முக்கிய பங்காற்றுவது தங்களது 25வது திரைப்படங்களே. இதுதான் அவர்களின் சினிமா வாழ்க்கைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் சூர்யா, கார்த்தி, விஜய், அஜித் என அனைத்து நடிகர்களும் வெற்றியை மட்டுமே பெறவில்லை. அதை பற்றி பார்க்கலாம்.

நடிகர் அஜித்துக்கு 25வது திரைப்படம் அமர்க்களம். இப்படத்தினை இயக்குனர் சரண் இயக்கினார். இப்படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைத்து. மேலும் அஜித் ஷாலினி காதலுக்கு இப்படமே ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் வாசிங்க:கிண்டலடித்த சினிமா உலகம்!.. அவமானத்தை தாண்டி ‘அப்பு’வாக சாதித்து காட்டிய கமல்..

அதைபோல் விஜய்யின் 25வது திரைப்படம் கண்ணுக்குள் நிலவு. விஜய்க்கு இப்படம் மிகப்பெரிய தோல்வியையே பெற்று கொடுத்தது. இப்படத்தை இயக்குனர் ஃபசில் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார்.

சிலம்பரசனின் 25வது திரைப்படம் சிலம்பாட்டம். இப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சனா கான் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் எஸ். சரவணன் இயக்கியிருந்தார்.

இதையும் வாசிங்க:நான் ஒன்னும் உத்தமிலாம் இல்ல!. இப்படி ஓப்பனா போட்டு உடைச்சிட்டாரே பிக்பாஸ் மாயா…

அதைபோல் நடிகர் சூர்யாவிற்கு 25வது திரைப்படம் சிங்கம். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். ஆனால் இவரது தம்பியான கார்த்திக்கு அவரது 25வது திரைப்படமான ஜப்பான் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். பொதுவாக தனது படத்திற்கான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கார்த்தி இப்படத்தில் அதை கோட்டைவிட்டார் என்ற கருத்துகளும் உலாவின.

அதைபோல் நடிகர் தனுஷிற்கு அவரது 25வது திரைப்படம் விஐபி. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைபோல் நடிகர் விஜய் சேதுபதிக்கு அவரது சீதக்காதி திரைப்படம்தான் 25வது திரைப்படமாகும். இப்படம் வந்ததே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. மேலும் ஜெயம் ரவிக்கு அவரது 25வது திரைப்படம் பூமி. இப்படம் வரலாறு காணாத தோல்வியையே தழுவியது என்றே கூறலாம்.

இவ்வாறு என்னதான் முன்னணி கதாநாயகர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பல திரைப்படங்கள் சறுக்கல்களை பெற்றுதான் தந்துள்ளது. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளும் ஒரு காரணமாகும்.

இதையும் வாசிங்க:கேப்டன் செஞ்ச உதவிக்கு இப்படியா விசுவாசத்தை காட்டுவீங்க?… விஜயை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.