Cinema History
கதை கேட்குறதுல அஜித் ஃபாலோ பண்ணும் நடிகர் யார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!..
சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை ஓட வைப்பது அப்படத்தின் கதை மட்டுமே. கதை, திரைக்கதை நன்றாக இல்லையெனில் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் ஓடாது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் பல திரைப்படங்கள் கூட சில சமயம் ரசிகர்களை கவராமல் போயிருக்கிறது.
அதேபோல், சிறிய மற்றும் அறிமுக நடிகர்கள் நடித்திருந்தாலும் கதை நன்றாக இருந்ததால் அந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியிருக்கிறது. சுப்பிரமணியபுரம், லவ் டுடே என பல திரைப்படங்களை அதற்கு உதாரணமாக சொல்ல முடியும். விஜய், அஜித் போன்ற நடிகர்களை வைத்து 150லிருந்து 200 கோடி வரை செலவு செய்து படமெடுத்து குறைந்த லாபத்தை பார்ப்பதை விட லவ் டுடே போன்ற படங்களில் 8 கோடி செலவு செய்து 80 கோடிக்கும் மேல் லாபம் பார்ப்பது தயாரிப்பாளரை மட்டுமல்ல. சினிமாவையும் வாழவைக்கும்.
இதையும் படிங்க: ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை!.. முரட்டு கோபக்காரரான அஜித் சாதுவாக மாறிய அந்த சம்பவம்!.
ஆனால், அதெல்லாம் இப்போதுள்ள நடிகர்களுக்கு புரிவதில்லை. 10 பேரிடம் கதை கேட்டு அதில் ஒரு கதையை தேர்வு செய்து அதில் நடித்து அதுவும் தோல்வி படமாக கொடுக்கிறார்கள். நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் கெட்டிக்காரர் என சொல்லப்படும் கார்த்தியே சமீபத்தில் ஜப்பான் எனும் தோல்வி படத்தை கொடுத்தார்.
ஒருபக்கம், நல்ல கதைகளை வைத்துக்கொண்டு வாய்ப்பில்லாமல் பல உதவி இயக்குனர்கள் சினிமா உலகில் சுற்றி வருகிறார்கள். சில சமயம் ஒரு ஹீரோவுக்கு கதை சொல்ல போய் அவரின் அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூட அந்த கதையை சொல்லிவிட்டு வந்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளது.
இதையும் படிங்க: இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு!. அலைபாயுதே ஸ்டைலில் பிட்டு போட்டு ஷாலினியை கவுத்த அஜித்…
இந்நிலையில், நடிகர் அஜித் கதை கேட்டு ஒரு படத்தை தேர்ந்தெடுப்பதில் ஒரு நடிகைரை பின்பற்றுவதாக பல வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். அவர் கூறியபோது ‘ கதை கேட்பதில் நான் பாலிவுட் நடிகர் அமீர்கானைத்தான் பின்பற்றுகிறேன்.
ஒரு கதையை நான் கேட்கும்போது அந்த கதை எந்த அளவுக்கு என்னை ஈர்க்கிறது.. என்னை ரசிக்க வைக்கிறது… அழ வைக்கிறது என்றுதான் முதலில் பார்ப்பேன். அதன்பின்னரே அந்த கதையில் என் கதாபாத்திரம் என்ன என்பதை பார்ப்பேன் என அமீர்கான் ஒருமுறை சொன்னார். அதையேதான் நானும் பின்பற்றுகிறேன்’ என அஜித் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பல உதவி இயக்குனர்களுக்கு அஜித் கொடுத்த வாய்ப்பு!.. தட்டி தூக்கி ஸ்கோர் செய்த எஸ்.ஜே.சூர்யா…