காசு கொடுத்தா இப்படியெல்லாம் நடிக்கணுமா?!… ராஷ்மிகாவை போட்டு பொளக்கும் ரசிகர்கள்…

Published on: December 7, 2023
RMI RK
---Advertisement---

செக்கச்செவந்த அழகின்னாலே கிராமப்புறங்களில் பார்ப்பதற்கும் மப்பும் மந்தாரமுமாக கொப்பும் குலையுமாக இருப்பாள் என்று சொல்வார்கள். அதை நிரூபிக்கும் விதத்தில் பேரழகி என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான். அவர் தற்போது ரன்பீர் கபூர் உடன் இணைந்து நடித்த அனிமல் படத்தால் பல சிக்கல்களைச் சந்தித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

கர்நாடகாவைச் சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. 2016ல் க்ரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே மாஸானார். 2018ல் கீதகோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து பிரபல நடிகையானார். தமிழில் சுல்தான் என்ற படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்தார். படம் சுமாராகப் போனது.

Animal
Animal

அனிமல் படத்தில் நடித்ததே நடித்தார். ஏன்தான் இப்படி நடித்தோமோ என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. எங்கு சென்றாலும் இதே பேச்சுதானாம். திரையுலகைப் பொருத்தவரை ஹீரோ ஒரு முத்தக்காட்சியில் நடித்தால் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அதே நேரம் ஒரு ஹீரோயின் முத்தக்காட்சியில் நடித்தால் அவரைத் தீண்டத்தகாதவர் போல பார்ப்பார்கள்.

ராஷ்மிகா மந்தனாவுக்கும் தற்போது இந்த நிலைமை தான். நேற்று வரை அடக்கம் ஒடுக்கமா இருந்த இந்த பொண்ணா இப்படி எல்லாம் நடிச்சதுன்னு தான் பார்க்குறவங்க எல்லாருமே சொல்றாங்களாம். அவங்களே இப்படி சொல்லும் போது அவரோட உறவினர்கள் மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?

அனிமல் படத்தில் துணிந்து நடித்து இருக்கிறார் அவர். முத்தங்கள், சூடான டயலாக்குகள், சூடான இதழ் முத்தம், படுக்கை அறைக் காட்சிகள் என அவருடைய விருந்து தான் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதையடுத்து ராஷ்மிகாவின் குடும்பத்தினர் அவரையே குறி வைத்து அவரது குடும்பத்தை அவமதித்து வருகிறார்களாம்.

அவரது தங்கை கூட ‘இப்படி ஒரு படத்தில் எப்படி நடித்தாய்?’ என கேள்வி கேட்டாராம். ராஷ்மிகாவோ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே சென்றுவிட்டாராம்.

இந்த செய்தி பாலிவுட் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகாவின் ரசிகர்களும் நீங்க தப்பு பண்ணிட்டீங்க… பணத்துக்காக இப்படி எல்லாம் நடிச்சிருக்கக்கூடாது. கேரியர் பாழாய் போகும்னு சொல்லி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி வருகிறார்களாம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.