Connect with us

Bigg Boss

வெள்ளித்திரையில் வெற்றிக்கண்ட பிக் பாஸ் ஹீரோக்கள்!.. எல்லாமே தரமான சக்சஸ் தானுங்க!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களாக கலக்கி வரும் நடிகர்கள் இந்த 2023ம் ஆண்டில் தரமான வெற்றியை ருசி பார்த்துள்ளனர்.

2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வசூல் வேட்டை நடத்திய ஆண்டாகவே மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு திரைத்துறைக்கு பெரும் சவாலாக இருந்த நிலையில், ஓடிடிக்களின் அணிவகுப்பும் தியேட்டர் பிசினஸை அநியாயமாக பாதித்துள்ளன.

இதையும் படிங்க: அய்யோ பத்திக்கிச்சு!.. பிக் பாஸ் முடிஞ்சதும் பூர்ணிமா அந்த போட்டியாளர் வீட்டுக்கு போகப் போறாராம்?..

விஜய், அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று நடிகர்களாக மாறிய பல இளம் நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு மக்களுக்கு பிடித்தமான படங்களாகவும் விமர்சகர்களின் ஃபேவரைட் படங்களாகவும் மாறியுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. ரசிகர்கள் பலரும் அந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இதையும் படிங்க: அதெப்படி திமிங்கலம்!.. குப்பையை அள்ளி குப்பை மேலயே போடுறாரு.. விஜய் பெயரை தொடர்ந்து டேமேஜ் பண்றாங்களே!..

அதன் பின்னர் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ரியோ ராஜ் நடித்த ஜோ திரைப்படம் நல்ல காதல் படமென பாராட்டுக்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

அதே போல கடைசியாக கடந்த வாரம் வெளியான பிக் பாஸ் சீசன் 1ன் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படம் இந்த ஆண்டின் சூப்பரான நிஜ வாழ்க்கையில் நடக்கும் த்ரில்லர் படம் என விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கரின் ஈகோ கிளாஷ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top