டைரக்டர் சொல்லியும் கேட்கல!.. அந்த நடிகர்தான் வேணும்.. சர்ச்சை நடிகருக்கு சப்போர்ட் பண்ணிய அஜீத்…

Published on: December 9, 2023
ajithkumar
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் பார்வையை தன் பக்கம் திருப்பியவர் நடிகர் பப்லு பிருத்திவிராஜ். இவர் தனது சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் சின்னத்திரையிலும் வலம் வந்தார்.

சன்டிவியில் வெளியான வாணி ராணி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களின் மூலம் இவர் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தையும் பிடித்தார். என்னதான் சீரியலில் நல்ல விதமாக நடித்தாலும் நிஜ வாழ்வில் இவர் மக்களால் விமர்சிக்கப்படும் ஒரு நபராகவே இருந்து வருகிறார்.

இதையும் வாசிங்க:விஜயகாந்த் பத்தி பொய் நியூஸ் சொல்லியே கொன்னுட்டீங்களேடா!.. மன அழுத்தத்தால் இறந்த ரசிகர்…

இவர் ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில் அவரது முதல் மனைவி இவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் கடந்த ஆண்டு ஷீட்டல் எனும் பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவரது இந்த செயல் மக்களிடையே பலவித கமெண்ட்களை பெற்றது.

ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து எந்தவொரு வீடியோவும் வெளியிடாததால் இருவரும் பிரிந்துவிட்டனர் எனும் செய்தி பரவியது. அது குறித்து பப்லு பேசுகையில் இவ்வளவு நாள் ஷீட்டலை நம்பி தான் ஏமாந்துவிட்டதாகவும் இனியும் முட்டாளாக இருக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். எனினும் இவர்கள் பிரிந்ததற்கான உண்மையான காரணம் இது வரை தெரியவில்லை.

இதையும் வாசிங்க:அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதானா? சூர்யாவுக்கு வச்ச ஆப்பு

ஆனால் இப்படி பல விதத்தில் பப்லு பேசப்பட்டாலும் அவர் ஒரு மிகச்சிறந்த நடிகரும் கூட. இவர் அஜித் நடிப்பில் வெளியான அவள் வருவாளா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அவள் வருவாளா திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் பப்லுதான் வில்லனாக நடித்திருந்தாராம். அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனால் அப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது அதில் வில்லனாக பப்லுவை நடிக்க வைக்க இயக்குனர் மறுத்துவிட்டாராம். ஆனால் அஜித் கண்டிப்பாக பப்லுவைதான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என கூறிவிட்டாராம். வில்லனாக அப்படத்தில் பப்லு நடித்த போது அஜித்துக்கு இணையாக பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.