தப்பா பேசிய பப்லு… ஆனால் அவருக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.. மாஸ் தல நீங்க..!

Published on: December 9, 2023
---Advertisement---

Babloo Prithviraj: தமிழ் சினிமாவில் பெரிய உயரத்துக்கு வர வேண்டிய பிரித்விராஜ் சண்டை, வம்பு என நிறைய இழந்து விட்டார். கடைசியில் அவருக்கு தற்போது பாலிவுட்டில் வெளியாகி இருக்கும் அனிமல் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

ஆனால் பிரித்விராஜுக்கு தன்னுடைய அவள் வருவாளா படத்தின் மூலம் நல்லதொரு வாய்ப்பை கொடுத்தவர் அஜித் தானாம். இப்படம் தெலுங்கு ரீமேக். அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனை தமிழில் ராஜ்கபூர் இயக்க இருந்தார். அதில் அஜித் நடித்தார். 

இதையும் வாசிங்க:தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?

ஆனால் வில்லனாக பப்லுவை நடிக்க வைக்கும் ஐடியாவில் படக்குழு இல்லை. அவர்கள் ரகுவரன் போன்ற முன்னணி வில்லனை நடிக்க வைக்கும் பேச்சுவார்த்தையில் இருந்தனர். ஆனால் அஜித் தான் இல்லை இந்த கேரக்டரில் கண்டிப்பாக பப்லு நடிக்க வேண்டும் என்றாராம்.

படப்பிடிப்புக்கு வந்த பின்னர் பப்லுவுக்கு இந்த விஷயம் தெரிந்தவுடன் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். அதனால் இருவருக்கும் ஒரு நட்பு உருவானது. படப்பிடிப்பில் எப்போதுமே அஜித்திடம் வந்து தேங்க்ஸ் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பாராம். கடுப்பாகி அஜித் ஏன் இத்தனை என்றாராம்.

இதையும் வாசிங்க: பாசமழையில் ரொம்ப உருகுறீங்களே… ராதிகாவும், பாக்கியாவும் அக்கா, தங்கச்சி மாதிரியாம்..! கோபி கேட்டா என்ன ஆகும்?

படக்குழு கூட ஒருவரை ஓகே செய்து விடலாம். ஆனால் நடிகர் மனம் வைத்து ஒரு படத்தில் நடிப்பது பலருக்கு கிடைக்காது. எனக்கு நீங்க செய்தது பெரிய விஷயம் என்றாராம். அந்த படம் ரிலீஸாகி ரகுவரன் லெவல் வில்லனத்தில் பிரித்விராஜ் பேசப்பட்டார்.

அந்த படத்தில் அஜித் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பப்லு நிறைய எக்ஸர்ஸைஸ் டிப்ஸ்களை சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஆனால் இந்த நட்பு இருக்கும் அஜித்தையே ஒரு பேட்டியில் ஜீரோ டெடிகேஷன் என அசால்ட்டாக சொல்லி சென்றார். அந்த பேட்டி சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.