படமே இன்னும் ரிலீஸ் ஆகல! அதுக்குள்ள இவ்ளோ காஸ்ட்லியான கிஃப்டா? ரஞ்சித்திற்கு ஷாக் கொடுத்த விக்ரம்

Published on: December 10, 2023
vikram
---Advertisement---

Actor Vikram: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். அந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

அதனை அடுத்து அவருடைய 61வது படமாக தங்கலான் திரைப்படம் அமைந்தது. அந்தப் படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். வரலாற்று அதிரடி திரைப்படமாக தயாராகும் இந்த தங்கலான் திரைப்படம் கே.ஜி.எஃபில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: புருஷனை வெறுப்பேற்ற கிளாமர் ரூட்டுக்கு மாறிய பிரபல நடிகை!.. எல்லாம் அந்த படம் பண்ண வேலை தானாம்!..

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் , பார்வதி மேனன் , ஆகியோர் நடித்திருக்கின்றனர். விக்ரம் மற்றும் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

ஒளிப்பதிவு கிஷோர் குமார். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை பதற வைத்திருக்கிறது. அந்தளவுக்கு விக்ரம் மற்றும் படத்தில் நடித்த பிற நடிகர்கள் என எவ்வாறு கஷ்டப்பட்டிருக்கின்றனர் என்பது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

இதையும் படிங்க: எல்லை மீறி போகுது உன் கிளாமரு!.. பிட்டு துணியில் அழகை காட்டும் சமந்தா…

கூடுதல் சிறப்பம்சமாக இருப்பது ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை. தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று விக்ரம் பா.ரஞ்சித்தை திடிரென சந்திக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகின்றது.

அதில் விக்ரம் பா.ரஞ்சித்திற்கு கையில் பூங்கொத்துடன் ஒரு கிஃப்டும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அதை பிரித்துப்பார்த்தால் விலையுயர்ந்த கண் கண்ணாடி கருப்பு நிறத்தில் இருந்தது. உடனே அதை வாங்கி பா.ரஞ்சித் போட்டும் காண்பித்தார்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்!.. கண்டுக்கொள்ளாமல் ஷூட்டிங் போகும் பெரிய நடிகர்கள்.. ஹரிஷ் கல்யாண் பளிச்!

இதை பார்த்த ரசிகர்கள் என்னென்னமோ வாங்கிக் கொடுக்கிறார்கள். இந்த கண்ணாடிக்கா இவ்ளோ பில்டப் என கிண்டலடித்து வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.