இனிதே நடந்து முடிந்த ரெடின் கிங்ஸ்லி திருமணம்! இந்த நடிகைதான் மனைவியா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்

Published on: December 10, 2023
redin
---Advertisement---

Actor Redin Kingsley:  இயக்குனர் நெல்சனின் ஆஸ்த்தான நடிகராக முத்திரை குத்தப்பட்டவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நகைச்சுவையில் ஒரு காமெடி கிங்காக அறியபட்டார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். அவர் பேசும் விதமே அனைவரையும் கவர்ந்தது. அந்தளவுக்கு நடித்த ஒரு சில படங்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகராக உருவெடுத்தார்.

redin
redin

இந்த நிலையில் இன்று ரெடின் கிங்ஸ்லியின் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது. அவர் சீரியல் நடிகை சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் திருமணம் ஒரு கோயிலில் நடந்திருப்பதாகவே தெரிகிறது.

அவர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் கடும் வயித்தெறிச்சலில் உள்ளனர். ஏனெனில் அந்தளவுக்கு ரெடின் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்.

redin
redin

இன்னும் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் ரெடின் வருங்காலத்தில் வடிவேலு, விவேக் இவர்களைப் போல பெரும் புகழை பெறும் நடிகராக வலம் வருவார் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. அந்தளவுக்கு தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.