ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட சதியா?!. ஜப்பான் விஷம் காரணமா?!. பகிர் கிளப்பும் பிரபலம்…

Published on: December 10, 2023
Sridevi, BK
---Advertisement---

தமிழ்சினிமாவில் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. பதினாறு வயதினிலே படத்தில் மயிலு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் மயக்கினார். கமல், ரஜினியுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். இவர அழகில் மட்டுமல்ல. நடிப்பிலும் மனதைக் கொள்ளை கொண்டவர். இவர் இறப்பு குறித்து பல மர்மங்கள் தொடர்ந்து நீடித்தது. தற்போதும் இதுகுறித்து ஒரு பகீர் கிளப்பும் தகவலை பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். என்ன என்று பார்க்கலாமா…

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை மரணம் அல்ல. தற்செயலாக நிகழ்ந்தது என்றனர். ஸ்ரீதேவி 2015ல் துபாயில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனிகபூருடன் செல்கிறார். ஒரு ஓட்டல் அறையில் இரவு தங்குகிறார். மறுநாள் குளியலறைத் தொட்டியில் இறந்து கிடக்கிறார். இது தற்கொலை அல்ல. இயற்கை மரணமும் கிடையாது. ஆனால் இது ஒரு கொலையாகத் தான் இருக்கும் என்பது போனிகபூரின் மீதே சந்தேக கண்ணோட்டத்துடன் திரும்புகிறது. அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, 240 கோடி ரூபாய் ஓமன் நாட்டுல உள்ள ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில ஸ்ரீதேவிக்கு போடப்பட்டு இருந்ததாம். அதைப் பெற வேண்டும் என்றால் வளைகுடா நாடுகளில் ஏதேனும் ஒன்றில் அவருக்கு மரணம் ஏற்பட வேண்டுமாம். அதே நேரம் அப்படி எதுவும் இல்லை. ஸ்ரீதேவியிடம் உள்ள பெரிய குடும்பச் சொத்தை அபகரிக்க ஏற்கனவே போனிகபூர் அவரிடம் கையெழுத்து வாங்கிவிட்டாராம்.

Sridevi
Sridevi

இப்படியே தொடர்ச்சியாக பல சந்தேகங்கள். துபாய் போலீஸே விசாரித்து அறிக்கையும் சமர்ப்பித்தார்களாம். அதில் போனி கபூரிடமும் விசாரித்து விட்டோம். இது தற்செயலாக நிகழ்ந்த மரணம் தான் என்று ஃபைலை குளோஸ் பண்ணி விட்டார்களாம்.

சமீபத்தில் தீப்தி பன்னந்தி என்ற தொழில் அதிபர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அதில் ஸ்ரீதேவிக்கு ஜப்பானை சேர்ந்த ஒரு பாம்பின் விஷம் அவரது குடும்பத்தினர்களாலேயே கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கும் நிலைக்குச் சென்று விட்டதாகவும் கூறினாராம். அதற்கான ஆதாரமும் அவரிடம் உள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் அவற்றை ஒப்படைக்க உள்ளதாகவும் கூறியுள்ளாராம்.

இந்தத் தொழில் அதிபர் ஸ்ரீதேவியின் பரம ரசிகராம். லக்னோவில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தாராம். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியால் பெரிய அளவில் நஷ்டம், அதே நேரம் அந்தத் துயர சம்பவத்தில் இருந்தும் மீள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

அதே நேரம் ஸ்ரீதேவி சரியான நேரத்திற்கு சாப்பிடாததாலும், அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம்… அதற்குரிய சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாததும், உணவில் உப்பை அறவே சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனைகளைப் பின்பற்றவில்லை. இதுதான் காரணம் என அவரின் கணவர் போனிகபூர் கூறியிருந்தார்.

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.